அனுமன் VS சிலிண்டர்.. கர்நாடக தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கையிலெடுத்த 2 ஆயுதங்கள்! மக்கள் யார் பக்கம்?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நாளான இன்றும் கூட 2 முக்கிய ஆயுதங்களை கையில் எடுத்து தனிமெஜாரிட்டியை பெற முயற்சித்து வரும் நிலையில் யாருக்கு ஆதரவாக மக்கள் இருப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே 24ல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் வகையில் மக்களிடம் ஆதரவு கோரினார்.
கர்நாடகாவில் 224 தொகுதி உள்ளதால் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளிலும், பாஜக 140 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் இலக்கு நிர்ணயித்து பிரசாரம் செய்தன.
மேலும் தேர்தலுக்கு முந்தைய சில கருத்து கணிப்புகள் பாஜக, காங்கிரஸ் என 2 கட்சிகளுக்கும் ஆதரவாக அமைந்த நிலையில் பல கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என கணித்துள்ளன. இது நடந்தால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஜேடிஎஸ்ஸை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். இதனால் தான் தனி மெஜாரிட்டிக்காக இருகட்சிகளும் கடைசி நேரம் வரை போராடி வருகின்றன.

இந்நிலையில் தான் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இறுதியாக 2 அஸ்திரங்களை தங்களது ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர். அதாவது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வதாக அறிவித்தது. அனுமனின் பக்தர்களாக இருப்பவர்கள் இந்த அமைப்பில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை காங்கிரஸ் செய்தது.
இதற்கு பாஜக, பஜ்ரங்தளம் உள்பட பிற இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்களான அமித்ஷா உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அனுமன் பக்தர்கள் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது மேடை பேச்சுகளில் ‛பஜ்ரங்பலி' என்ற கோஷத்தை முன்வைத்தார்.
அதோடு பாஜக தலைவர்கள் அனைவரும் கோவிலில் அனுமன் சாலிசா பாடல்களை பாடினர். முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே உள்பட பல முக்கிய தலைவர்கள் அனுமன் சாலிசா பாடல்களை பாடினர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி இந்து கடவுள்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை பாஜக வலியுறுத்தியது. பாஜகவின் இத்தகைய மதம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பல தேர்தல்களில் கைக்கொடுத்துள்ளது. அதன்படி இப்போதும் கர்நாடகாவில் பாஜக அதனை முன்னெடுத்தது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் வாக்குறுதியோடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்தது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் சிலிண்டருக்கு பூஜை செய்து எதிர்ப்பை காட்டினார். மேலும் ஓட்டுப்பதிவுக்கு முன்பாக பொதுமக்கள் அனைவரும் சிலிண்டருக்கு பூஜை செய்து கும்பிட்டு வந்து வாக்களிக்க வேண்டும் என கூறினார். அதன்படி இன்று கர்நாடகாவில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
இப்படியாக இந்த தேர்தலில் பாஜக பஜ்ரங்தள அமைப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரத்தையும், காங்கிரஸ் கட்சி பாஜக தான் சிலிண்டர் விலை உயர்த்தியதாகவும் கூறி பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் யார் மக்கள் நிற்பார்கள். எந்த கட்சியின் பிரசார வியூகம் வெல்லும். யாருடைய பிரசாரத்திற்கு மக்கள் செவிமடுப்பார்கள் என்பதை அறிய நாம் தேர்தல் முடிவு வெளியாகும் மே 13ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications