பெங்களூரில் இருந்து சென்ற ஆம்னி பஸ்.. நள்ளிரவில் சுற்றி வளைப்பு.. பெட்டியை திறந்து ஆடிப்போன அதிகாரி
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுவுக்கு வயநாடு வழியாக நேற்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இந்த ஆம்னி பஸ்சில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பெங்களூருவில் இருந்து சென்ற ஆம்னி பஸ்ஸை வயநாடு அருகே நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
வரி ஏய்ப்பு செய்யப்பட்ட கறுப்புப் பணத்தைப் பரிமாற ஹாவாலா முறை பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற தேசவிரோதச் செயல்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பதால், ஏஜென்ட் ஏமாற்றிவிட்டால் சட்டப்படி புகார் அளிக்க முடியாது.

இந்தியாவில் FEMA மற்றும் PMLA ஆகிய சட்டங்களின் கீழ் ஹவாலா பரிமாற்றம் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே முறையற்ற வகையில் கணக்கில் காட்டாத பணத்தை ஏஜெண்டுகள் மூலம் கடத்துவதை ஹாவாலா பணம் என்கிறார்கள்.இப்படி கடத்தி செல்லப்படும் பணத்தை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அத்துடன் கடத்தியவரையும் கைது செய்வார்கள்.
அப்படித்தான், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுவுக்கு வயநாடு வழியாக நேற்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இந்த ஆம்னி பஸ்சில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கலால்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே தோல்பெட்டி பகுதியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தை, கலால்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது பஸ்சியில் பயணம் செய்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், அந்த வாலிபர் வைத்திருந்த பையை கைப்பற்றி முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் அந்த பணத்திற்கான எந்தவொரு ஆவணமும் வாலிபரிடம் இல்லாததும், ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.31 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஷாகிர்(வயது 28) என்பதும், அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஹவாலா பணத்தை கொடுக்க பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ்சில் கொண்டு செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது. கைதான அவரிடம் பெங்களூருவில் யாரிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications