அடேங்கப்பா! ஹாசன் தொகுதியில் மட்டும் 25,000 பேருக்கு பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் விநியோகம்- குமாரசாமி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஹாசன் லோக்சபா தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் 25,000 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது; இந்த வீடியோ விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; இந்த நீதி விசாரணை முடிவடையும் வரை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹாசன் தொகுதியில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் 25,000 பேருக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் கர்நாடகா மாநிலம் முழுவதுமே இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் கொடுக்கப்பட்டுள்ளது.

HD Kumaraswamy seeks Probe on Pen drives distribute with Prajwal Revanna videos

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட்டதில் துணை முதல்வர் டிகே சிவகுமாருக்கு பங்கு இருக்கிறது என்கிறது பாஜகவின் தேவராஜ் கவுடாவின் ஆடியோ பதிவு. கர்நாடகா அரசு தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துகிறது. ஆனால் இது சிவகுமார் புலனாய்வுக் குழு விசாரணையாகிவிட்டது. இந்த விசாரணையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கப் போவதும் இல்லை.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த நீதி விசாரணை முடிவடையும் வரை டிகே சிவகுமார், துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். டிகே சிவகுமாரின் வரலாறு என்ன என்பதை தோண்டினால் தானாகவே தெரிந்துவிடும். ஆபாச வீடியோக்கள் வெளியிட்டது யார் என்பது தொடர்பாக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார்.

ஆபாச வீடியோக்களை வெளியிடுவது குற்றம். அப்படியானால் ஆபாச வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது ஏன் இதுவரை வழக்கும் பதிவு செய்யவில்லை. இவர்கள் மீது எப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படும்?

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவில் 16 வயது சிறுமி பாதிக்கப்பட்டிருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் 16 வயது சிறுமி எவரும் இதுவரை புகார் தரவும் இல்லை. ஆனால் இந்த வீடியோவை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் பிரசாரம் செய்துவிட்டது. ராகுல் காந்தி தமது புகார் குறித்து விளக்கம் தர வேண்டும். இவ்வாறு குமாரசாமி வலியுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+