எனக்கு ஒரேயொரு மகன் தான்..உடலையாவது வெட்டாமல் தாங்க.. கூட்ட நெரிசலில் பலியான மாணவனின் தந்தை கதறல்
பெங்களூர்: ‛‛எனக்கு இருந்தது ஒரெயாரு மகன். 22 வயது வரை செல்லமாக வளர்த்தேன். இப்போது தெருவில் இறந்துள்ளான். அவனை விட்டு ஒருமணிநேரம் கூட பிரிந்தது இல்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். என் மகன் உடலை வெட்டாமல், உடற்கூறாய்வு செய்யாமல் என்னிடம் தாங்க'' என்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.
ஐபிஎல் 18 வது சீசனின் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதுதான் ஆர்சிபியின் முதல் ஐபிஎல் கோப்பையாகும். கடந்த 17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி இந்த முறை முதல் முறையாக சாதித்தது.

இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடக மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று மதியம் ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்தனர்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார். அதன்பிறகு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவில் பங்கேற்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். விதானசவுதா முதல் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர்.
அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி என்ற 28 வயது பெண் உள்பட மொத்தம் 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் பூமிக் என்ற சிறுவன் இறந்தார். இன்ஜினியரிங் மாணவரான பூமிக் தீவிர ஆர்சிபி ரசிகர். நேற்றைய தினம் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வந்தபோது அவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பூமிக்கின் உடலை பார்த்து தந்தை மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
குறிப்பாக தந்தை மகனை இழந்த சோகத்தில் கதறி அழுதார். அப்போது,‛‛எனக்கு இருந்தது ஒரேயொரு மகன் தான். இப்போது அவனையும் இழந்துவிட்டேன். என்னிடம் சொல்லாமல் அவன் இங்கு வந்துவிட்டான். இப்போது முதல்வர், துணை முதல்வர் வந்து பார்க்கலாம். ஆனால் யாராலும் என் மகனை திருப்பி தர முடியாது. என் மகனின் உடலையாவது என்னிடம் தாருங்கள். அவன் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டாம். அவன் உடலை துண்டு துண்டாக வெட்ட வேண்டாம்.
நான் ஒருபோதும் அவனை விட்டு பிரிந்து இருந்தது இல்லை. ஒரு மணிநேரம் கூட பிரிந்து இருந்தது இல்லை. ஒரெயொரு மகன் என்பதால் செல்லமாக வளர்த்தேன். 22 வயது வரை வளர்த்தேன். ஆனால் இப்போது தெருவில் இறந்துவிட்டான். உங்களுக்கு எல்லாம் நன்றிகள். நடந்தது நடந்தாக இருக்கட்டும். தயவுசெய்து என் மகன் உடலையாவது என்னிடம் தாங்க.'' என்று கதறி அழுதார். இது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி மற்றவர்களையும் கலங்கடிக்க செய்துள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications