வீட்டு பூஜை ரூமில் 32 மண்டை ஓடுகள்.. வீடு முழுக்க சிதறி கிடந்த எலும்புகள்.. அதிர்ந்த பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அந்த பண்ணை வீட்டுக்குள்ளே நுழைந்ததுமே, அதிர்ந்து போய்விட்டார்கள் போலீசார்.. யாரிந்த பல்ராம்? பண்ணை வீட்டில் என்ன செய்கிறார்?

பெங்களூரில் ராமநகரா மாவட்டம், ஜோகனஹள்ளி கிராமத்தில் உள்ளது இந்த பண்ணை வீடு.. எப்போதுமே இந்த வீட்டிற்குள் ஏதாவது சத்தம் கேட்டுக் கொண்டே இருக்குமாம். குறிப்பாக, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில், பண்ணை வீட்டிலிருந்து விநோத சத்தம் வருவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

Heart Breaking incident in Bangalore and Man storing 32 human skulls bone Cot at farmhouse in Ramanagara

ஒரே மர்மம்: இதையடுத்து, போலீசாருக்கு இந்த விஷயம் சென்றதையடுத்து, நேரடியாகவே கிளம்பி வந்துவிட்டார்கள்.. அந்த பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.. அப்போது, அங்கிருந்த ஒரு பூஜையறையை கண்டு அதிர்ந்து நின்றுவிட்டார்கள்.

அறை முழுக்க மனித எலும்புகள் குவித்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.. மொத்தம் 32 மனித மண்டை ஓடுகளும் அங்கே இருந்திருக்கின்றன.. கை, கால்கள், என உடலுறுப்புகளின் எலும்புகளும் அந்த ரூமில் சிதறியிருந்தன..

பக்கெட்கள்: இவைகளை தவிர, பக்கெட்கள், பூஜை பொருட்கள் போன்ற அனைத்துமே அந்த ரூமில் இருந்திருக்கின்றன.. இவைகளில், மண்டைஓடுகள் மட்டும், ஷெல்ப்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மண்டை ஓட்டிற்கு நெற்றியில், விபூதி பூசப்பட்டிருந்தது.

இதைத்தவிர, பூஜை அறைக்கு பக்கத்திலேயே ஒரு கட்டிலில் 2 மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளை போலீசார் அவிழ்த்து பார்த்தால், அதற்குள்ளும் மனித எலும்புகள் கிடந்ததாம்.. இதைவிட பயங்கரம், மனித எலும்புகளாலேயே அந்த கட்டில் செய்யப்பட்டிருந்ததாம்.. கட்டிலுக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியும், மனித எலும்புகளால் செய்யப்பட்டிருந்ததாம். இதையெல்லாம் பார்த்து போலீசார் மிரண்டு விட்டார்கள்.

Heart Breaking incident in Bangalore and Man storing 32 human skulls bone Cot at farmhouse in Ramanagara

யாரிந்த பலராம்: இந்த பயங்கரத்துக்கு காரணமே பலராம் என்பவர்தானாம்.. அந்த பண்ணை வீட்டின் ஓனரும் இந்த பலராம்தான்.. போலீசார் அங்கே நுழைந்த நேரம், பூஜையறையில் விசேஷ பூஜையை பலராம் செய்து கொண்டிருந்தாராம்.. போலீசாரை பார்த்ததுமே வெலவெலத்து போய்விட்டார்.

இங்குள்ள தொழிற்சாலைகளை லீசுக்கு எடுத்துள்ள பலராம், இதற்கு பின்புறத்திலேயே தன்னுடைய பண்ணை வீட்டை கட்டியிருக்கிறாராம்.. இந்த பண்ணை வீட்டிற்கு ஸ்ரீ ஸ்மஷன காளி பிடா என்று பெயர்ப்பலகையை வைத்திருக்கிறார்..
ஓய்வெடுக்க வேண்டுமென்றால், இந்த பண்ணை வீட்டிற்கு அடிக்கடி வந்துபோவாராம் பலராம்..

சுடுகாடு: அதுமட்டுமல்ல, அந்த கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டுக்கே சென்று, பலராம் மண்டை ஓடுகளை வைத்து வணங்குவாராம்.. இதை அந்த கிராமவாசிகளே நேரில் பார்த்ததாக, போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்கள். கைப்பற்றப்பட்ட மண்டைகள் ஓடுகள், எலும்புக்கூடுகள், அந்த கட்டில், நாற்காலி எல்லாமே இப்போதைக்கு தடயவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதையடுத்து, பல்ராமை போலீசார் உடனடியாக கைது செய்து, விசாரணையை துவங்கினர்.. மண்டை ஓடுகளை வைத்து இரவில் நேரத்தில் சடங்குகள் செய்வதாக போலீசாரிடம் சொல்லியிருக்கிறார் பல்ராம்.

பூஜைகள்:
இப்படி பூஜைளை செய்வதற்காகவே, அந்த பகுதியிலிருக்கும் சுடுகாடுகளிலிருந்து மண்டை ஓடுகளை சேகரித்து வருவாராம். சில மண்டை ஓடுகள் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த மூதாதையர்களுடையது என்றும் சொல்கிறார்..

இப்போதைக்கு, வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக ராமநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ரெட்டி கூறியிருக்கிறார்.. இனிமேல்தான் மொத்த விவரங்களும் தெரியவரும்.. இத்தனை மண்டைகளும் கல்லறையில் எப்படி கிடைத்திருக்கும்? இதன் பின்னணி என்ன? என்ற விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

எலும்புக் கட்டில், எலும்பு சேர்.. இதையெல்லாம் பார்த்து பீதியில் உறைந்தும், நடுநடுங்கியும் போயிருக்கிறார்கள் பெங்களூர்வாசிகள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+