கர்நாடகாவில் நொறுக்கி எடுக்கும் மழை.. ரெட் அலர்ட் வார்னிங்! மூழ்கிய வீடுகள்.. 5 பேர் பலியான சோகம்!
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, சிவமோக்கா, பெலகாவி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பாகல்கோட், கலபுர்கி, விஜயபுரா, பல்லாரி, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலை மாவட்டங்களான சிக்கமகளூர், ஹாசன், சிவமொக்கா மற்றும் குடகு, வட கர்நாடக மாவட்டங்களான பெலகாவி, கதக், கலபுரகி, ஹாவேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் பெங்களூரில் கன மழை பெய்யவில்லை என்றாலும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் காவிரி, கிருஷ்ணா, குமாரதாரா, பல்குனி, நேத்ராவதி, துங்கா, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா, கட்டபிரபா, பயஸ்வினி, காளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஏராளமான தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 15 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குளங்கள் பெரும்பாலானவை முழுமையாக நிரம்பி விட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

குடகு மாவட்டத்தில் பருவமழை கடுமையாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல கிராமங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தொடர் கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தாவணகெரே மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சிறுமி இடிபாடுகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல, மாநிலத்தில் பல பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களால் 5 பேர் பலியாகியுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications