"சூறைக்காற்று + ரெட் அலர்ட்.." பெங்களூரில் அடுத்த ஒரு வாரம் கனமழை வெளுக்கும்.. கர்நாடகாவுக்கு அலர்ட்
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏற்கனவே பருவமழை ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே கர்நாடகாவில் அடுத்து சில நாட்கள் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இன்றும் நாளையும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யலாம் என்பதால் கர்நாடகாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மே மாதம் வெயில் தான் அதிகமாக இருக்கும். கத்திரி வெயில் காலத்தில் சூரிய வெப்பம் நம்மை படுத்தி எடுத்துவிடும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மே மாதம் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கூட மழை தொடர்ந்து பெய்தே வருகிறது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இதற்கிடையே வரும் மே 31ம் தேதி வரை பெங்களூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இன்றும் நாளையும் கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியவுடன் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மழை ஆரம்பித்துவிட்டது.
பொதுவாக இந்த பருவமழை சீசனில் பெங்களூரில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை தொடரும்
மேற்கு மத்திய மற்றும் கிழக்கு மத்திய அரேபியக் கடலின் சில பகுதிகளிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும், முழு கோவாவிலும், மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளிலும், மிசோரமின் சில பகுதிகளிலும், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாகப் பெங்களூரில் உள்ள இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர கர்நாடகாவில் இன்று தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் சில இடங்களில் (மணிக்கு 40-50 கிமீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40-50 கிமீ பலத்த காற்றுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா
நாளைய தினமும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் (மணிக்கு 40-50 கிமீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் (மணிக்கு 40-50 கிமீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூர் வானிலை
தெற்கு உள் கர்நாடகாவை பொறுத்தவரை இன்று சிக்கமகளூரு, குடகு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் (மணிக்கு 50-60 கி.மீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சாமராஜநகர், ஹாசன், மண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் பல்லாம், பெங்களூர் (ரூரல்), பெங்களூர் (அர்பன்), சிக்கபல்லபுரா, சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், ராமநகரம், தும்கூர் மற்றும் விஜயநகர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications