அப்போது சந்திரயான் 1, மங்கள்யான்! இப்போது ஆதித்யா எல்1.. அசத்தும் இஸ்ரோவின் PSLV வகை ராக்கெட்டுகள்
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இன்று ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதனை PSLV-C57 ராக்கெட் தாங்கி செல்கிறது. PSLV ராக்கெட்டை பொறுத்த வரையில் 25வது பயணமாகும்.
பூமியின் வானிலையை கணிப்பதை போல விண்வெளிக்கும் வானிலை இருக்கிறது. இந்த வானிலையில் ஏற்படும் சில மாற்றங்கள் பூமியை கடுமையாக பாதிக்கலாம். அதாவது பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ள சூரியன்தான் இந்த விண்வெளி வானிலையை தீர்மானிக்கிறது. இதிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள், கதிர்வீச்சுகள், காந்த துகள்கள் ஆகியவை பூமியில் உள்ள மின்னணு பொருட்களை கடுமையாக பாதிக்கும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்தியா நீண்ட காலமாக திட்டமிட்டு வந்திருந்தது. அப்படி இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஆதித்யா எல்1 விண்கலம்.
இது இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இதில் மொத்தம் 7 கருவிகள் இருக்கின்றன. இந்த விண்கலத்தை விண்வெளிக்கு கொண்டு செல்ல PSLV-C57 பயண்படுத்தப்படுகிறது. PSLV வகை ராக்கெட் இஸ்ரோவின் நம்பகமான ராக்கெட்களில் முதன்மையானதாகும். இதை செல்லமாக 'நம்பகமான வேலை குதிரை' என்று இஸ்ரோ குறிப்பிடுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இது பயன்படுத்தப்பட்ட அனைத்து மிஷன்களும் சக்சஸ் ஆகியுள்ளன.
பூமியிலிருந்து சாதாரணமாக ஒரு பொருள் மேலே செல்ல வேணடும் எனில் அது விநாடிக்கு 11 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும். சாதாரண பொருளுக்கே இப்படியெனில், 1,480.7 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலத்தை பூமியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும் எனில் கூடுதல் உந்தவிசை தேவை. இப்படி இவ்வளவு வெயிட்டை தூக்கிக்கொண்டு போகதான் PSLV வகை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் மொத்தம் 4 கட்டங்கள் இருக்கின்றன.
முதல் கட்டத்தில் உந்துதலை அதிகப்படுத்த 6 என்ஜின்கள் இருக்கும். இரண்டாவது கட்டத்தில் 4 மூன்றாவது கட்டத்தில் 2, கடைசி கட்டத்தில் ஒன்று என என்ஜின்கள் இருக்கின்றன. PSLV வகையில் பல பிரிவுகள் இருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் 1 ஏவப்பட இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது. இது தவிர 2013ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட மங்கள்யான் திட்டம், 2022ம் ஆண்டு 6 செயற்கைக்கோள்களை கொண்டு சென்றது என பல மிஷன்களில் இந்த வகை ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று விண்ணில் ஏவப்படும் PSLV-C57 ராக்கெட் இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் 25வது PSLV வகை ராக்கெட்டாகும். ஆத்தியா எல்1 இன்று விண்வெளிக்கு ஏவப்பட்டாலும் அது நிர்ணயிக்கப்பட்ட இடத்தை சென்று சேர 4 மாதங்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications