ஹிஜாப் அணிய அனுமதி: கர்நாடக ஹைகோர்ட்டில் 11 நாட்கள் நடந்த விசாரணை நிறைவடைந்தது! தீர்ப்பு ஒத்திவைப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் மாணவிகளின் வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு பியூ கல்லூரிகயில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு குடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார். பிறகு மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.

இடைக்கால உத்தரவு
மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகு தினமும் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்தது. மாணவிகள் தரப்பு வக்கீல்கள், அரசு தரப்பு வக்கீல்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

சிபிஐ விசாரணை வேண்டும்
இந்நிலையில் கர்நாடக ஐகோர்டில் நேற்று 11வது நாளாக வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நவதகி நேற்று தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு மாணவிகள் தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன்வைத்தனர். புதிதாக தாக்கலான மனு சார்பில் வக்கீல் சுபாஷ் ஜா ஆஜராகி வாதாடினார். ''ஹிஜாப்புக்காக இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற சாத்தியமில்லை. இந்த வழக்கில் வாதாட நாடு முழுவதும் மூத்த வக்கீல்களை நியமித்துள்ளனர். சிலருக்கு நிதி உதவி வருகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும்'' என்றார்.

எழுத்து பூர்வமாக தாக்கல்
அதைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் மேலும் சில வக்கீல்கள் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க நீதிபதிகளிடம் அனுமதி கோரினர். அதற்கு தலைமை நீதிபதி, இந்த வழக்கில் வாதிட விரும்பும் விஷயங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர். இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படும் என நினைத்த நிலையில் 11 விசாரணைக்கு பிறகும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications