ஹிஜாப்.. இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி கிடைக்குமா? கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணை 4 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா மாணவர்கள் பலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடையுடன் வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லா மாணவர்களும் யூனிபார்ம் மட்டுமே போட வேண்டும். வேறு உடைகளை அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கு
இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.
நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், மூத்த வழக்கறிஞர் முகமது தாஹிர் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர். வழக்கு விசாரணை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

விறுவிறுப்பான வழக்கு
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகமது தாஹிர் வைத்த வாதத்தில், பியு கல்லூரிகளில் தேர்வு நடக்க 2 மாதம் மட்டுமே உள்ளது. இப்போது போய் உடை கட்டுப்பாடு கொண்டு வருவது சரியல்ல. இப்போது மாணவிகளை ஹிஜாப் அணிய அனுமதியுங்கள், என்று குறிப்பிட்டார். அதேபோல் மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: அரசு இதில் கொஞ்சம் பெருந்தன்மையோடு நடக்க வேண்டும். மாணவிகள் பள்ளி சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகமது தாஹிர் வைத்த வாதத்தில், பியு கல்லூரிகளில் தேர்வு நடக்க 2 மாதம் மட்டுமே உள்ளது. இப்போது போய் உடை கட்டுப்பாடு கொண்டு வருவது சரியல்ல. இப்போது மாணவிகளை ஹிஜாப் அணிய அனுமதியுங்கள், என்று குறிப்பிட்டார். அதேபோல் மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: அரசு இதில் கொஞ்சம் பெருந்தன்மையோடு நடக்க வேண்டும். மாணவிகள் பள்ளி சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும்.

தடை கூடாது
ஹிஜாப் என்பது இஸ்லாமில் மத அடிப்படை உரிமைகளில் ஒன்று. புனித குரான் புத்தகத்தில் இது மத ரீதியான விதிகளில் ஒன்றாக உள்ளது. அது அவர்களின் அடிப்படை உரிமை. தங்கள் உடைகளை தேர்வு செய்யும் உரிமை சட்டம் 19(1)ன் கீழ் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஒரு அரசின் "பொது உத்தரவு" தடை செய்ய முடியாது,என்றார் . அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர்: நாம் ஒன்றை ஆராய வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்று சோதிக்க வேண்டும்.

வாதம் எப்படி
கல்லூரிகள், பள்ளி நிர்வாகம் தங்கள் மாணவர்களின் உடை விதிகளை தேர்வு செய்யலாம். இதில் மாற்றம் வேண்டும் என்றால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை அணுகலாம். இதில் உத்தரவுகளை விதிப்பது சரியாக இருக்காது, என்றார். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணா தீட்சித் , நான் இந்த வழக்கில் உணர்வு பூர்வமாக தீர்ப்பு வழங்க மாட்டேன். சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன். அரசியலமைப்பு சட்டம் சொன்னபடி விசாரிப்பேன். என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டம்தான் பகவத் கீதை.
Recommended Video

பார்க்க முடியவில்லை
உரிய தீர்ப்பு வழங்கப்படும் வரை எல்லோரும் அமைதி காக்க வேண்டும். போராட்டங்களை கைவிட வேண்டும்.
கல்லூரியில் நடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது. உலக நாடுகள் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்பதை மறக்க வேண்டாம், என்று கூறி வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி என்ன சொன்னார்?
இன்றைய வழக்கில் இதுவரை நடந்த வாதத்தில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் , இந்த வழக்கு மிக முக்கியமான ஒன்று . பல மாநிலங்களில் உயர் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்புகளை ஆராய வேண்டி உள்ளது. இது ஒரு நீதிபதி விசாரிப்பதை விட கூடுதல் நீதிபதிகள் கொண்டபெரிய அமர்வுக்கு மாற்றுவதே சரியாக இருக்கும். நீங்கள் ஏற்றுக்கொண்டால் மனுவை பெரிய அமர்விற்கு மாற்றலாம் என்று நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு இஸ்லாமிய மாணவிகள் தரப்பு, இன்னும் தேர்வு நடக்க வெறும் 2 மாதமே உள்ளதால் விரைந்து முடிவு எடுக்க கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தொடர்ந்து இந்த வழக்கு மீதான வாதங்கள் நடந்து வருகின்றன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications