ஹிஜாப் விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? வராத பதில்.. லோக்சபாவில் திமுக, காங். வெளிநடப்பு
பெங்களூர்: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் வாதம் செய்தது பெரிய கவனம் பெற்றுள்ளது.
கர்நாடக பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்துத்துவா மாணவர்கள் பலரின் போராட்டத்தை தொடர்ந்து, மாணவ, மாணவியர் யூனிபார்ம் மட்டுமே அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பியு கல்லூரி மாணவியர் பலர் வழக்கு தொடுத்துள்ளனர். பல மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் இந்த வழக்கை தொடுத்த நிலையில் அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடத்தப்பட்டது.

4 மணி நேர விசாரணை
இந்த வழக்கு விசாரணை 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகின்ற நிலையில்.. வழக்கில் நடந்த சில முக்கிய விவாதங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
நீதிபதி கிருஷ்ணா தீட்சித் : பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஹிஜாப் அணிவது தொடர்பாக உடனே உத்தரவு பிறப்பிக்க கேட்டுள்ளனர். இதில் ஒரு மனுவில் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதே உத்தரவு பிற மாவட்டங்களில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கும் பொருந்தும்.
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: பல மாணவ, மாணவியர் தாக்கல் செய்த மனுக்கள் இன்னும் இங்கு வரவில்லை . அதையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும்.

வாதம் என்ன?
நீதிபதி கிருஷ்ணா தீட்சித் : சரி, அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரிக்கிறேன். நான் இந்த வழக்கில் உணர்வு பூர்வமாக தீர்ப்பு வழங்க மாட்டேன். சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன். அரசியலமைப்பு சட்டம் சொன்னபடி விசாரிப்பேன். என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டம்தான் பகவத் கீதை.
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகமது தாஹிர்: பியு கல்லூரிகளில் தேர்வு நடக்க 2 மாதம் மட்டுமே உள்ளது. இப்போது போய் உடை கட்டுப்பாடு கொண்டு வருவது சரியல்ல. இப்போது மாணவிகளை ஹிஜாப் அணிய அனுமதியுங்கள்.
நீதிபதி கிருஷ்ணா தீட்சித் : இரண்டு மாதங்களுக்கு பின் பள்ளி கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொள்வீர்களா?

அடிப்படை உரிமை
நீதிபதி கிருஷ்ணா தீட்சித் அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி : நீங்கள் தாஹிர் சொன்னதை கேட்டீர்களா? இப்போது பிரச்னையை முடியுங்கள், 2 மாதம் பின் பாலிசி கொண்டு வரப்பட்டால் அதை பின்பற்றுவோம் என்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.. இப்போது அனுமதிக்கலாமா? கல்லூரியில் நடப்பதை என்னால் பார்க்கக் முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது. உலக நாடுகள் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்பதை மறக்க வேண்டாம்.
நீதிபதி கிருஷ்ணா தீட்சித் : அதோடு என்னுடைய போனை திறந்தாலே யார் யாரோ தீர்ப்பு இப்படி வழங்குங்கள், அப்படி வழங்குங்கள் என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். பல தீர்ப்பு உதாரணங்களை அனுப்புகிறார்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர்: நாம் ஒன்றை ஆராய வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்று சோதிக்க வேண்டும்.

பெருந்தன்மையான முடிவு
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: அரசு இதில் கொஞ்சம் பெருந்தமையோடு நடக்க வேண்டும். மாணவிகள் பள்ளி சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். தேர்வு நடக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவை போட வேண்டும். அதன்பின் தேர்வு முடிந்த முழு உத்தரவு கொடுக்கலாம்.
அரசு தரப்பு: கல்லூரிகள், பள்ளி நிர்வாகம் தங்கள் மாணவர்களின் உடை விதிகளை தேர்வு செய்யலாம். இதில் மாற்றம் வேண்டும் என்றால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை அணுகலாம். இதில் உத்தரவுகளை விதிப்பது சரியாக இருக்காது.
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: ஹிஜாப் என்பது இஸ்லாமில் மத அடிப்படை உரிமைகளில் ஒன்று. புனித குரான் புத்தகத்தில் இது மத ரீதியான விதிகளில் ஒன்றாக உள்ளது. அது அவர்களின் அடிப்படை உரிமை. தங்கள் உடைகளை தேர்வு செய்யும் உரிமை சட்டம் 19(1)ன் கீழ் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஒரு அரசின் "பொது உத்தரவு" தடை செய்ய முடியாது.

குரான் அடிப்படை உரிமை
நீதிபதி: மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் கூறிய இந்த 2 கருத்துக்களை நீதிபதி குறிப்பெடுத்துக்கொண்டார்.
நீதிபதி: உலகம் முழுக்க பல நாடுகளில் மத ரீதியான உடைகள் அடிப்படை உரிமைகளாக பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: நம்முடைய நாடு "நேர்மறை மதசார்பற்ற நாடு". அதாவது நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அதாவது அனைத்து மதங்களையும், அவர்களின் உடைகளையும் பின்பற்ற அடிப்படை உரிமை உள்ளது

ஹிஜாப் தவறில்லை
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: பள்ளிகள் சிலர் ஹிஜாப் அணிவார்கள், சிலர் நாமம் அணிவார்கள், சிலர் சிலுவை அணிவார்கள்.. இதுதான் மதசார்பற்ற தன்மை. அனைத்திற்கும் உரிமை உள்ளது. இந்த பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நேற்று தனியாக அமர வைக்கப்பட்டுள்ளனர். இது நவீன் தீண்டாமை. இது மத ரீதியான தீண்டாமை. அவர்கள் பல மாதங்களாக ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். திடீரென தேர்வு நேரத்தில் இதை பிரச்சனையாக்குகிறார்கள் என்று மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் கூறினார்.
நீதிபதி: இந்த வாதத்தை நீதிபதி குறிப்பெடுத்துக்கொண்டார்.
Recommended Video

நான் ஒரு பிராமின்
மாணவிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்: நான் ஒரு பிராமின். நான் என் பள்ளிக்கு நாமம் அணிந்து சென்றுள்ளேன். என் மகன் நாமம் அணிந்து செல்கிறான். அவனை யாரும் தடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது ஹிஜாப் அணிவதை பிரச்சனையாக்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் வாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் இந்த வழக்கில் சில நிமிடம் ஆன்லைன் ஜூம் மீட்டிங் நடப்பதில் சிக்கல் இருந்தது. அதேபோல் உணவு இடைவேளைக்கு பின் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நெட் பிரச்சனை இருந்ததால் வழக்கு விசாரணை தாமதம் ஆனது. பின்னர் வழக்கு விசாரணை கேரளா, மெட்ராஸ் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் சில எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications