கர்நாடகாவில் பரபரப்பு.. 10ம் வகுப்பு இறுதித்தேர்வில் 20,994 பேர் ஆப்சென்ட்! ஹிஜாப் தடையும் காரணமா?
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நடந்த எஸ்எஸ்எல்சி தேர்வில் 20,994 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்று முதல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு(இறுதித்ததேர்வு) துவங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டன.

மாணவிகள் தடுத்து நிறுத்தம்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை ஹிஜாப் அணிந்து மாணவிகள் எழுத அனுமதியில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி நாகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி உள்பட சில இடங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர்.

திரும்பி சென்ற மாணவிகள்
கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது. சீருடையில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என எடுத்து கூறினர். இதையடுத்து சில மாணவிகள் அவர்களின் பேச்சுக்கு செவிசாய்த்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். உடுப்பி, தட்சிணகன்னடம், பாகல்கோட்டை, தார்வார் மாவட்டங்களில் சில இடங்களில் தேர்வு எழுத வந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

20,994 பேர் ஆப்சென்ட்
இந்நிலையில் தான் நேற்று நடந்த தேர்வில் மொத்தம் 20,994 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கர்நாடக இடைநிலை கல்வி தேர்வு வாரியம் கூறியுள்ளது. இருப்பினும் அவர்கள் தேர்வு எழுதாதற்கான காரணம் குறித்த விபரங்கள் தெரியவில்லை என அந்த வாரியம் கூறியது. இது இதற்கு முன்பு நடந்த எஸ்எஸ்எல்சி தேர்வை ஒப்பிடும்போது பலமடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் பிரச்சனை
இதுபற்றி அந்த வாரியம் மேலும் கூறுகையில், ‛‛மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனைகள் இல்லை. உப்பள்ளி, பாகல்கோட்டில் மட்டும் ஹிஜாப் தொடர்பான பிரச்சனை எழுந்தது. அதற்கும் உரிய தீர்வு காணப்பட்டது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தது. 336 மாணவர்கள் தனி அறைகளில் தேர்வு எழுதினர். இவர்களுக்கு சளி, இருமல் பிரச்சனை இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்'' என்றார்.

கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் மத்தியில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் பலரும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை. இந்நிலையில் தான் நேற்று எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கிய நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அந்த மாநிலத்தில் 20,996 பேர் ஆப்சென்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் மத்தியில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுது்து முஸ்லிம் மாணவிகள் பலரும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை. இந்நிலையில் தான் நேற்று எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கிய நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அந்த மாநிலத்தில் 20,996 பேர் ஆப்சென்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications