Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப்: தனிநபர் விருப்பத்தை விட கல்வி நிலைய ஒழுங்கை காப்பாற்றிய தீர்ப்பு- கர்நாடக அட்டர்னி ஜெனரல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு தனிநபர் விருப்பத்தை விட கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை மேலோங்க செய்துள்ளது'' என அரசு தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் பிபுலிங் நவத்கி கூறினார்.

கர்நாடகத்தில் சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. மாணவ-மாணவிகள் இடையே போட்டி போராட்டங்கள் நடந்தன

மாணவர்களின் ஒரு பிரிவினர் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் ஹிஜாப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்துத்துவா மாணவர்கள் காவிஷால் அணிந்து போராட்டம் நடத்தினர்.

மாணவிகள் வழக்கு

மாணவிகள் வழக்கு

சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்த மாணவிகள் தனி வகுப்பறையில் வைக்கப்பட்டனர். மாணவர்கள் தொடர்ந்து போராடியதால் சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, ஹிஜாப் தடையை நீக்க கோரி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார்.

மூன்று நீதிபதிகள் அமர்வு

மூன்று நீதிபதிகள் அமர்வு

இந்த வழக்கை அவர் மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு விசாரித்தது. மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 25ல் முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு

தீர்ப்பு

இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

Recommended Video

    ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமில்லை - கர்நாடக உயர் நீதிமன்றம்
    மேலாங்க செய்யும் தீர்ப்பு

    மேலாங்க செய்யும் தீர்ப்பு

    இதுகுறித்து அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதாடிய கர்நாடக அட்டர்னி ஜெனரல் பிரபுலிங் நவத்கி நிருபர்களிடம் கூறுகையில், "கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்கிறது. தனிநபர் விருப்பத்தை விட கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை மேலோங்க செய்துள்ளது. இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் 25வது பிரிவை உறுதி செய்கிறது. சபரிமலை தீர்ப்பில் உச்ச நீதிமன்ற கூறியதை எடுத்துக்காட்டிய நீதிபதிகள் ஒரு மதத்தின் அடிப்படை தேவை என்று நம்பப்படும் விஷயங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது. அதை அடிப்படை பழக்க வழக்கமாக கருத முடியாது என்று கூறினர்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+