"நைட் ஷிப்ட்!" வேலையில் மூழ்கிய புருஷன்! காதலனுடன் ஹோட்டலில் ஒதுங்கிய மனைவி! காட்டி கொடுத்த ஜிபிஎஸ்
பெங்களூர்: இப்போது நமக்கு டெக்னாலாஜி பல்வேறு விதங்களில் உதவுகிறது.. அப்படித்தான் இளைஞர் ஒருவருக்குத் தனது வாழ்கையிலேயே மிகப் பெரிய விஷயத்தைக் கண்டறிய இந்த தொழில்நுட்பம் உதவியுள்ளது. அது குறித்துப் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் எல்லாமே ஆன்லைன் வழியாக மாறி வருகிறது. டேட்டிங் முதல் ஷாப்பிங் வரை இப்போது எல்லாமே இணைய வசம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் நமக்குப் பல நன்மைகளும் உள்ளன.
அதேபோல பல குற்றங்களைக் கண்டறியவும் சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் நமக்குப் பெரியளவில் உதவுகிறது. அதுபோலத் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூர்
தொழில்நுட்பம் நமக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியே தருகிறது. இக்கட்டான நமது வாழ்க்கையை அது மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது என்றால் மிகையில்லை. அதே டெக்னாலஜி பெங்களூரைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு எடுக்க உதவியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த நபர், தனது குடும்பத்திற்குச் சொந்தமான காரில் இருந்து ஜிபிஎஸ் டேட்டா மூலம் தனது மனைவி மற்றொருவருடன் தொடர்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.

நைட் ஷிப்ட்
இது தொடர்பாக அந்த நபர் கூறுகையில், "எங்கள் வீட்டில் இருக்கும் காரின் ஜிபிஎஸ் எனது மொபைலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் டிராக்கர் தான் எனது மனைவி வேறு ஒருவருடன் ரகசிய உறவில் இருப்பதை கண்டறிய உதவியுள்ளது. எனக்கு எப்போதும் இரவு ஷிப்ட் தான். தினசரி இரவு வழக்கம் போல நான் வேலைக்குச் சென்றுவிடுவேன். இந்த ஜிபிஎஸ் டேட்டாக்களை பார்க்கும் வரை எனது மனைவியின் உறவு குறித்துப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.

ஜிபிஎஸ் டேட்டா
அவர்களின் காரில் ஜிபிஎஸ் வசதி இருப்பதும் அது கணவரின் மொபைலுடன் இணைக்கப்பட்டுள்ளது குறித்தும் அந்த பெண்ணுக்குச் சுத்தமாகத் தெரியாதாம். இதை எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதை விவரிக்கும் அந்த நபர், "கடந்தாண்டு ஒரு நாள், நான் வழக்கம் போல இரவு ஷிப்டில் பணியாற்றும் போது எனது காரை யாரோ ஒருவர் வெளியே எடுத்துச் சென்றுள்ளதைக் கண்டேன். ஜிபிஎஸ் டேட்டாவை விரிவாக ஆய்வு செய்தேன். அது பெங்களூர் ஏர்போர்ட் நோக்கிச் சென்றதும் நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

ஹோட்டலில் மனைவி
மேலும், அதிகாலை 5 மணிக்கு, அங்கிருந்து கார் மீண்டும் எனது வீட்டிற்கு வந்துள்ளது. இதனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. காரை திருடுபவனாக இருந்தால், அவன் ஏன் மீண்டும் எனது வீட்டிற்கே எடுத்து வருகிறான்.. இதையடுத்து நான் அந்த ஹோட்டலுக்கு சென்று இது குறித்துக் கேட்டேன். அப்போது தான் என் மனைவியும் அவரது பாய் பிரண்டும் தங்கள் வாக்காளர் அட்டையைப் பயன்படுத்தி ரூமை புக் செய்துள்ளதைக் கண்டுபிடித்தேன்" என்று அவர் கூறுகிறார்.

கொலை மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது மனைவியிடம் சென்று இது குறித்துக் கேட்டுள்ளார். முதலில் அவரது மனைவி பதறியபடி மறுத்துள்ளார். இருப்பினும், ஜிஎபிஎஸ் ஆதாரங்களைக் காட்டிய அந்த இளைஞர், தான் ஹோட்டலில் சென்று கேட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது காதலுடன் சேர்ந்து கொண்டு கணவரையே மிரட்டத் தொடங்கியுள்ளார். இதையடுத்து கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, அந்த நபர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

விசாரணை
நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் மகாலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பெண் பெங்களூரில் இருக்கும் வீட்டில் இருந்து வெளியேறி, எங்கோ தனது காதலனுடன் வசித்து வருகிறார்.. இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்களுக்குக் கடந்த 2014இல் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஆறு வயது பெண் குழந்தையை உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications