அப்துல் கலாம் கேட்ட ஒற்றை கேள்வி! சந்திரயான் வெற்றியின் பின்னணியில் ஒளிந்திருக்கும் ரகசியம்! சூப்பர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்- 3 திட்டம் மூலம் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்துள்ளது. இந்நிலையில் தான் சந்திரயான் வெற்றியின் பின்னணியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கேட்ட ஒற்றை கேள்வி தான் இன்று வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்துள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா விண்வெளி திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் சந்திரயான் 2 திட்டத்தால் செய்ய முடியாமல் போன இலக்கை எட்ட சந்திரயான் 3 திட்டம் உருவாக்கப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கம் என்பது நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கம் செய்து அங்கு ஆய்வு மேற்கொள்வது தான்.

How APJ Abdul Kalam raises question and advices for Chandrayaan-1 Mission?

அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சந்திரயான் 3 திட்டம் மூலம் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து திட்டமிட்டப்படி புவிவட்டபாதை, நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 திட்டம் முறையாக செயல்பட்டு வுந்தது. சில நாட்களுக்கு முன்பு புவி வட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் உந்துவிசை கலன் நுழைந்தது. இதையடுத்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் பணி துவங்கியது.

இதையடுத்து நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வரும் சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்திய நிலையில் படிப்படியாக அதன் வேகம் குறைக்கப்பட்டது. இன்று வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. ‛சாப்ட் லேண்டிங்' முறையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதித்தது.

இதையடுத்து அடுத்த 4 மணிநேரத்தில் விக்ரம் லேண்டரின் வயிற்றுப்பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் நிலவு ஆய்வு குறித்த சந்திரயான் திட்டத்தின் தற்போதைய வெற்றியின் பின்னணியில் தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக கோவையை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குனராக சென்னையை சேர்ந்த விஞ்ஞானி வனிதாவும், இந்த திட்டம் செயல்படுத்தியபோது இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரியை சேர்ந்த சிவனும் இருந்தனர். தற்போதைய சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குனராக விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் இருக்கிறார். இது எல்லாம் நாம் அறிந்தது தான்.

இருப்பினும் பலரும் அறியாத ஒரு செய்தி என்னவென்றால் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த விஞ்ஞானியும், ‛ஏவுகனை நாயகனுமான' அப்துல் கலாம் சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் இருப்பது தான். அதாவது அப்துல் கலாம் கேட்ட ஒற்றை கேள்வி தான் இஸ்ரோ விஞ்ஞானிகளை யோசிக்க வைத்து தற்போதைய நிலவின் பயணத்தை வெற்றிகரமாக்கி உள்ளது.

அதாவது இந்தியா நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய முதல் விண்கலம் என்பது சந்திரயான் 1 ஆகும். இது கடந்த 2008 ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து ‛இம்பேக்ட் ப்ரோப்' சிறிய கருவி நிலவின் தரையில் மோத செய்யப்பட்டது. இந்த கருவி தான் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது. இதில் ‛இம்பேக்ட் ப்ரோப்' கருவியை உருவாக்க கூறியது அப்துல் கலாம் தான்.

அதாவது சந்திரயான் 1 திட்டத்துக்கு முன்பாக அப்துல் கலாம் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்தார். அப்போது சந்திரயான் 1 திட்டம் பற்றி கேட்டார். விஞ்ஞானிகள் ஆர்ப்பிட்டரை நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்ற வைத்து போட்டோக்கள் எடுப்பது தான் திட்டம் என தெரிவித்தனர். இந்த வேளையில் அப்துல் கலாம், ‛‛வெறும் ஆர்ப்பிட்டரை நிலவில் சுற்ற வைப்பது என்பது நிலவு பயணத்தை சாத்தியமாக்காது. மாறாக நிலவில் மோதும் வகையிலான கருவியை தயாரிக்க வேண்டும். இதுதான் நிலவு பயணத்தின் நம்மை மேம்படுத்தும்'' என தெரிவித்தார்.

அப்துல் கலாம் சொன்ன இந்த அட்வைஸ் அடிப்படையில் தான் சந்திரயான் 1 திட்டத்தில் ‛இம்பேக்ட் ப்ரோப்' கருவி உருவாக்கப்பட்டு நிலவில் மோத செய்து நீர் மூலக்கூறுகளை உறுதி செய்தது. இவ்வாறு சந்திரயான் 1 திட்ட வெற்றியின் பின்னணியில் அப்துல் கலாம் பங்காற்றி உள்ளார். மேலும் அதன்பிறகு சந்திரயான் 1 திட்டத்தின் ‛இம்பேக்ட் ப்ரோப்' கருவிக்கு பதில் விக்ரம் லேண்டரை தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கி அதில் இருந்து பிரக்யான் ரோவர் மூலம் ஆய்வு செய்வது தான் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 திட்டமாகும்.

இதில் 2019ல் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் ஆர்ப்பிட்டர் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றி வர செய்யப்பட்டது. ஆனால் நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிபோது அது விழுந்து நொறுங்கியது. இதில் இருந்து பாடம் கற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டரை மேம்படுத்தி நேற்று வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கினர். அதன்பிறகு தற்பாது ரோவர் நிலவின் தென்துருவத்தில் ஆய்வை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+