"கசந்த" மனைவி.. 25ஐ கல்யாணம் செய்த 45.. ஏன் இந்த முடிவு.. 4 மாத கர்ப்பம் வேற.. யார் கண்ணு பட்டுச்சோ?
கர்நாடகா விவசாயி திடீரென தற்கொலை செய்து கொண்டார்
பெங்களூரு: 25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. கர்நாடக மாநிலமே அதிர்ந்து போயுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா.. 45 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.
இவர் மேனகா என்ற 25 பெண்ணை திருமணம் செய்தார்.. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்டவர்தான் மேகனா..

கணவர் மாயம்
மேனகாவுக்கும் ஒரு இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. ஆனால், 2 வருடங்களுக்கு முன்பு கணவருடன் மேனகாவுக்கு கருத்து வேறுபாடு வரவும், ஒருநாள் திடீரென வீட்டில் இருந்து கணவர் மாயமாகி விட்டார்.. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் தனித்து வாழ்ந்து வந்த நிலையில்தான் வேறு திருமணம் செய்ய முடிவு செய்தார். அப்போதுதான், அதே கிராமத்தை சேர்ந்த சங்கரண்ணாவுடன் காதல் மலர்ந்தது.

திருமணம்
இரு வீட்டு சம்மதத்துடன், உறவினர்கள் முன்னிலையில், ஒரு கோவிலில் வைத்து மேனகாவை திருமணம் செய்து கொண்டார் சங்கரண்ணா.. இவர்களின் திருமண போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.. காரணம், சங்கரண்ணா வயதான தோற்றம் உடையவராக இருந்ததால், 60 வயது முதியவர், 25 வயது பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

வீடியோ
இவர்களின் திருமண போட்டோக்களை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் வெளியாகின.. எனினும் எதையுமே இந்த தம்பதி கண்டுகொள்ளவில்லை.. கல்யாணத்துக்கு பிறகு, சங்கரண்ணாவும்-மேகனாவும் டிக்-டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தனர்... என்ன ஆச்சு என்றே தெரியவில்லை.. சங்கரண்ணா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கர்ப்பம்
இவர்கள் 2 பேருமே திருமணம் முடிந்ததும் சந்தோஷமாகவே மணவாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.. மகிழ்ச்சியுடனே வாழ்ந்தும் வந்துள்ளனர்.. இப்போது மேகனா 4 மாத கர்ப்பமாக இருக்கிறார்.. கடந்த சில தினங்களாகவே, மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் அம்மாவுக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.. இதனால் மேகனா, சங்கரண்ணாவிடம் மைசூரு அல்லது பெங்களூரு ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று சொல்லி உள்ளார்.

தகராறு
ஆனால் சங்கரண்ணாவோ, "அம்மா தான் எனக்கு முக்கியம், அம்மாவை விட்டுட்டு வர மாட்டேன் என்று சொன்னதாக தெரிகிறது.. இதனால் தம்பதி இடையே தினமும் சண்டை வந்துள்ளது.. அப்படித்தான் நேற்று முன்தினமும் தகராறு நடந்திருக்கிறது.. எப்ப பார்த்தாலும் சண்டை, தகராறு என்று வீடு உள்ளதால், மனம் உடைந்து போனார் சங்கரண்ணா.. மனைவியை சமாதானப்படுத்த முடியாமல், அம்மாவையும் விட்டுவிட்டு வர முடியாமல் நிலைகுலைந்து போனார்.. இறுதியில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து கிளம்பி அக்கிமிதிபாளையா என்ற கிராமத்துக்கு சென்றார்.. அங்கே ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.

மேனகா
இந்த தகவல் அறிந்ததுமே, மேகனாவும், சங்கரண்ணாவின் அம்மா ரங்கம்மாவும் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதார்கள்.. இதனிடையே, சங்கரண்ணா மரணத்துக்கு காரணம் மேகனா தான் என்றும், தற்கொலைக்கு தூண்டிவிட்டதே மேனகாதான் என்றும் சங்கரண்ணாவின் அம்மா ஹிலியூர்துர்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. .

மருமகள்
இதை பற்றி அம்மா ரங்கம்மா சொல்லும்போது, ''நேற்று முன்தினம் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தேன்... அப்போது என் மருமகள் நாயை அவிழ்த்து விட்டார்.. நான் பயத்தில் கீழே விழுந்துட்டேன். 'இது சம்பந்தமாக என் மகன்கிட்ட சொன்னேன்.. என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு மகனிடம் மருமகள் சொன்னார்.. குடும்ப தகராறில்தான் என் மகன் தற்கொலை செய்து கொண்டார்' என்றார்.

மாமியார் - மருமகள்
தற்கொலை குறித்து மேனகா சொல்லும்போது, "நாங்க 2 பேரும் நல்லாதான் இருந்தோம்.. ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்கிட்ட சண்டை போட்டுட்டு வந்தார்... நான் அடிக்கடி வெளியில் சென்று ஊர் சுற்றுகிறேன் என்று என் மேல் பழி சொன்னார்.. என் அம்மா, அப்பாகிட்ட கூட என்னை பேசவிடவே இல்லை.. இப்படி எல்லாம் இருந்தால் இங்கே குடும்பம் நடத்த முடியாது என்று என் கணவர் சொல்லவும், அதற்கு மாமியார், அப்படின்னா செத்து போ என்று என் கணவரை திட்டினார்... அதனாலத்ன் அவர் கோபத்தில் வீட்டை விட்டு போனார்.. ஆனால் திரும்பி வரவே இல்லை.. காலையில் தான் எனக்கு விஷயம் தெரிந்தது.. நான் இப்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறேன்'" என்றார்.

அதிர்ச்சி
இருவருமே மாறி மாறி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், விசாரணை நடக்கிறது.. கல்யாணமான 5 மாதத்தில் சங்கரண்ணாவின் தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது... கர்ப்பிணி பெண்ணின் பரிதாப நிலைமையும் கலங்கடித்து வருகிறது.. இருந்தாலும் யார் கண்ணு பட்டுச்சோ..?

மாமியார் - மருமகள்
தற்கொலை குறித்து மோகனா சொல்லும்போது, "நாங்க 2 பேரும் நல்லாதான் இருந்தோம்.. ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்கிட்ட சண்டை போட்டுட்டு வந்தார்... நான் அடிக்கடி வெளியில் சென்று ஊர் சுற்றுகிறேன் என்று என் மேல் பழி சொன்னார்.. என் அம்மா, அப்பாகிட்ட கூட என்னை பேசவிடவே இல்லை.. இப்படி எல்லாம் இருந்தால் இங்கே குடும்பம் நடத்த முடியாது என்று என் கணவர், மாமியாரிடம் சொல்லவும், அதுதான் அவருக்கு கோபமாகிவிட்டது. "அப்படின்னா செத்து போ' என்று என் கணவரை திட்டினார்... அதனாலத்ன் அவர் கோபத்தில் வீட்டை விட்டு போனார்.. ஆனால் திரும்பி வரவே இல்லை.. காலையில் தான் எனக்கு விஷயம் தெரிந்தது.. நான் இப்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறேன்'" என்றார்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!












Click it and Unblock the Notifications