Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவீன ட்ரோன்களால் சிக்கிய சிறுமி உடல்! கர்நாடக ட்ரெக்கிங் போதை புகாரும், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டும்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கோடை காலத்தில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க பலரும் மலை பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்வது வழக்கம். அப்படி சுற்றுலாவுக்கு பிளான் வைத்து இருக்கிறீர்களா?. அப்படியென்றால் முதலில் கர்நாடகாவில் நடந்த இந்த துயர சம்பவம் பற்றி படித்துவிட்டு கவனமுடன் சுற்றுலாவுக்கு புறப்படுங்கள். அப்படி என்ன நடந்தது கர்நாடகாவில்? வாங்க பார்க்கலாம்.

கோடை கோலம் தொடங்கிவிட்டது. வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதோடு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பலரும் மலை பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர். இப்படி சுற்றுலா செல்லும்போது ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரையே இழக்க நேரிடலாம் என்பதை எச்சரிக்கும் வகையில் கர்நாடகாவில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

kerala trekker in Chikkamagaluru

இந்த சம்பவம் நடந்த இடம் சிக்கமகளூரு மாவட்டம். இது கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். இங்கு மலைகளில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்தின் பிற இடங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் சுற்றுலா சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

10ம் வகுப்பு மாணவி

அந்த வகையில் தான் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் காடம்பல்லிபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஸ்ரீநந்தா தனது குடும்பத்தினர், உறவினர்கள் என்று மொத்தம் 40 பேருடன் சிக்ககமகளூருவுக்கு 3 பஸ்களில் சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப்பார்த்தனர்.

கடந்த 7ம் தேதி முல்லையன்கிரி, சந்திரதிரிகோண மலைகளை சுற்றி பார்க்க சென்றனர்.
சந்திரதிரிகோண மலையில் உச்சியில் மாணிக்கத்தாரா அருவி உள்ளது. இந்த அருவிக்கு அவர்கள் அனைவரும் சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் செல்போனில் வீடியோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலை 5.30 மணியளவில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

மாணவி மாயம்

அப்போது ஸ்ரீநந்தா மாயமானார். அவரை அனைவரும் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. சிக்கமகளூரு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 60 குழுக்கள் அமைக்கப்பட்டு ஸ்ரீநந்தாவை தேடும் பணி தொடங்கியது. மேலும் மாணிக்கத்தாரா அருவிக்கு அன்றயை தினம் மொத்தம் 240 வாகனங்கள் சென்றன.

அந்த வாகனங்களில் அவர் கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் கூடுதலாக 10 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினரும் மாணவியை யாரும் கடத்தி சென்றார்களா? என்பதை விசாரித்தனர். 8,9, ஆகிய தேதிகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதற்கிடையே மாணவியை தேடும் பணியை தீவிரப்படுத்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உத்ரவிட்டார்.

2 ஆயிரம் அடி பள்ளத்தில் உடல்

இதனால் கடந்த 10ம் தேதி நவீன ட்ரோன் கொண்டு வரப்பட்டு தேடும் பணி நடந்தது. வெப்பம் உணர் திறன் கொண்ட டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது. அப்போது தான் மாணிக்கத்தாரா அருவியின் அருகே 2 ஆயிரம் அடி ஆழத்தில் மாணவி பிணமாக கிடந்தது டிரோன் கேமராவில் பதிவானது.

இதையடுத்து மீட்பு குழுவினர் 2 ஆயிரம் அடி பள்ளத்தாக்கிற்கு சென்று உடலை மீட்டனர். அப்போது அது மாணவி ஸ்ரீநந்தா என்பது உறுதி செய்யப்பட்டது. உடல் கயிறு கட்டி மேலே கொண்டு வரப்பட்டது. உடலில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் ஸ்ரீநந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

சந்தேகம் கிளப்பிய குடும்பத்தினர்

மாணிக்கத்தாரா அருவியை பார்த்துவிட்டு இறங்கும்போது ஸ்ரீநந்தா, செல்பி மோகத்தில் 2 ஆயிரம் அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? யாரேனும் அவரை பள்ளத்தில் தள்ளிவிட்டு கொன்றார்களா? அல்லது பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பதில் மர்மம் நீடித்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபற்றி மாணவி ஸ்ரீநந்தாவின் தாய் கூறுகையில், ''மகளின் உடல் கிடைத்த இடத்தில் இதற்கு முன்பு தேடுதல் பணி நடந்தது. அப்போது உடல் கிடைக்கவில்லை'' என்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எங்களோடு வந்தார். யாராவது போதை மருந்தை உட்கொள்ள வைத்து தப்பாக நடந்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.

how-did-kerala-15-year-old-trekker-girl-missing-and-died-in-chikkamagaluru-details-here

எஸ்பி சொல்வது என்ன?

அதேவேளையில் சிக்கமகளூர் எஸ்பி ஜிதேந்திர குமார் தயமா கூறுகையில், ''மாணவியின்உடல் மீட்கப்பட்டுள்ளது. மாயமான மாணவியின் உடல் தான் அது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து மாணவி இறந்திருக்கலாம். இருப்பினும் பிற கோணங்களிலும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

அதேபோல் போலீசார் தரப்பில், ''மாணவி மாயமானதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் தான் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை தடுப்பு வேலிகள் போடப்பட்டள்ளது. மக்கள் சென்று வர ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. வியூ பாயிண்ட்டில் இருந்து மாணவி விழுந்து இருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்'' என்றார்.

இதனிடையே மாணவியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் மாணவி கொலை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவியின் தாய் சொன்ன குற்றச்சாட்டு உறுதியாகவில்லை.

பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு

இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகாவில் சுற்றுலா இடங்களாக உள்ள வனம் மற்றும் மலைப்பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் மலையேற்றம் உள்பட மலை பிரதேசங்களுக்கு செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மலை பிரதேசங்களில் செல்லும் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் பிரத்யேக செயலி உருவாக்கும் திட்டம் உள்ளதாம். இந்த செயலியை மலை பிரதேசங்களில் செல்லும் மக்களின் செல்போனில் டவுன்லோட் செய்து ஆனில் வைத்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் திட்டம் உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கவனம் மக்களே

கர்நாடகாவில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு குடகு மாவட்டத்தில் 36 வயது நிரம்பிய கேரளா பெண் டிரக்கிங் சென்று தாடிஅன்டமால் மலையில் மாயமானார். நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். இதனால் மலை பிரதேசம், அருவிகள் என்பது நாம் பார்ப்பது போல் அழகாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தவை.

இதனால் கோடை காலத்தில் மலை பிரதேசங்களில் சுற்றுலா செல்லும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செல்பி, வீடியோ மோகத்தில் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+