குஜராத்தின் அமுல் கூட சண்டை போடாம.. சைலண்ட்டா ஆப்பு வச்ச கர்நாடக காங்கிரஸ் அரசு! நந்தினி டாப்
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த நந்தினி பால் நிறுவனம் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனங்களை ஸ்பான்சர் செய்ய உள்ளது.
கடந்த சில காலமாகவே இந்தியாவில் பால் பிராண்ட்களுக்கு இடையே தான் பிரச்சினை இருந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு அமுல் நிறுவனம் பெங்களூரில் டெலிவரி சேவையை ஆரம்பிக்க இருந்த நிலையில், அதற்கு மிக பெரிய எதிர்ப்பு கிளப்பியது. அப்போது அங்கே பாஜக ஆட்சி நிலவியது.

பாஜக ஆட்சியின் கீழ் குஜராத்தில் இயங்கும் அமுல் நிறுவனம் கர்நாடகாவில் பாஜகவின் ஆதரவோடு நுழைவதற்கான பணிகளை தீவிரமாக செய்தது. முக்கியமாக குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் பெங்களூருவில் ஆன்லைன் டெலிவரிகளை தொடங்குவதாகப் பதிவிட்டிருந்தது.
கர்நாடகாவின் அரசு பால் நிறுவனமான நந்தினியின் சேவையை இது பாதிக்கும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்மாநில பாஜக அரசு அம்மாநில மக்களுக்கே துரோகம் செய்வதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அதோடு இல்லாமல் நந்தினி - அமுல் இணைக்கப்பட போவதாகவும் செய்திகள் வந்தன. நந்தினி பிராண்டின் உரிமையாளராகக் கர்நாடகா பால் கூட்டமைப்பு உள்ளது. இதைக் குஜராத்தின் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் (அமுல்) உடன் இணைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியானது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் இதைக் கையில் எடுத்து பாஜகவைக் கடுமையாகச் சாடினர்.
கர்நாடக நிறுவனத்தை அழிக்கும் தீய முயற்சி இது என்றும் அவர்கள் சாடினர். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இது மிக முக்கியமான பிரச்சனையாக இருந்தது. இணையத்தில் #GoBackAmul, #SaveNandini உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது. இதன் ஒரு பகுதியாகக் கர்நாடகாவில் உள்ள ஒரு ஹோட்டல் அமைப்பு, மாநில பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக நந்தினி பாலை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது.
அமுல் பொருட்களை வாங்க மாட்டோம் என்று அனைத்து கன்னடர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.. மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் காக்க ஏற்படுத்தப்பட்ட கர்நாடகா பால் கூட்டமைப்பை அழிக்க முயல்பவர்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்தி திணிப்பு என்ற மொழி துரோகம் மட்டுமின்றி, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக விளங்கும் கர்நாடகா பால் கூட்டமைப்பை முடக்கி விவசாயிகளுக்குத் துரோகம் செய்யப் போகிறது பாஜக அரசு. குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் இணைப்பு முயற்சிகள் வெற்றி பெறாததால், பின் வாசல் வழியாகக் கர்நாடகாவுக்குள் அமுலைக் கொண்டுவர முயல்கின்றனர் என்று அங்கே காங்கிரஸ் முழக்கமிட்டது.
கடைசியில் அமுலின் வருகை வெற்றிபெறவில்லை. மாறாக நந்தினி அங்கே தொடர்ந்து பலப்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி: அதிலும் காங்கிரஸ் ஆட்சியில் நந்தினி மீது தனி கவனம் செலுத்தப்பட்டு அந்த அமைப்பு வேகமாக வளர வழி கொடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவை சேர்ந்த நந்தினி பால் நிறுவனம் ஸ்கட்லாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனங்களை ஸ்பான்சர் செய்ய உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் ஆதரவு நெட்டிசன் ஒருவர் செய்துள்ள போஸ்டில், குஜராத்தியின் 'அமுல்' விளம்பரத்திற்காக 'நந்தினி'யைக் கொல்ல கர்நாடக பாஜக அரசு முயற்சித்தது. காங்கிரஸ் இதை தேர்தல் பிரச்சினையாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது, அதற்கு கன்னட மக்கள் பதில் அளித்து பாஜகவை தோற்கடித்தனர்.
இப்போது, ஒரு வருடத்தில், காங்கிரஸ் அரசாங்கம் 'நந்தினி'யை மிகவும் வலிமையாக்கியுள்ளது, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்யப் போகிறது. காங்கிரஸின் வளர்ச்சியும் தொலைநோக்கு பார்வையும் அதுதான், பாஜக ஆட்சி அமைத்திருந்தால், 'நந்தினி' இன்று இருந்திருக்காது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications