Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக நீதி + மாநில உரிமை! ரோல் மாடலான திராவிட மாடல்! கர்நாடகாவில் ஸ்டாலின் ஸ்டைலில் இறங்கிய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் பல்வேறு சமூக நீதி கொள்கைகளையும், மாநில உரிமை கொள்கைகளையும், பல்வேறு இலவசங்களையும் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஹிட் அடித்த பல திட்டங்களை அங்கே காங்கிரஸ் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

How is Congress using DMK manifesto model from Tamil Nadu for Karnataka?

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் சில முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டு உள்ளது.

அதன்படி,

  • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்
  • அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்
  • வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம்
  • வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 3,000 நிதி உதவி
  • டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,500
  • விவசாய கடன் ரூ3 லட்சத்தில் இருந்து ரூ10 லட்சமாக உயர்த்தப்படும்
  • கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி
  • விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும்
  • சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும்
  • ஆழ்கடல் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்
  • 5 ஆண்டுகளில் ரூ. 12,000 கோடியில் நீல பொருளாதாரம்
  • மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 6,000 நிதி உதவி
  • பால் மானியம் லிட்டருக்கு ரூ. 5-ல் இருந்து ரூ. 7 ஆக உயர்வு

பெண் உரிமை:

இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

How is Congress using DMK manifesto model from Tamil Nadu for Karnataka?

ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம்.

இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு உதவிய இந்த வாக்குறுதியை தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் கையில் எடுத்து உள்ளது.

திராவிட மாடல்:

How is Congress using DMK manifesto model from Tamil Nadu for Karnataka?

அதேபோல் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் இருப்பது போலவே, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி அங்கே அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும். கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி போன்றவை தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம் இதை அப்படியே காங்கிரஸ் கர்நாடகாவில் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரோல் மாடலாக திகழும் திட்டங்களை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிவித்து உள்ளது.

முன்னதாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கேயும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.

How is Congress using DMK manifesto model from Tamil Nadu for Karnataka?

பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

சமூக நீதி:

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரசும் கையில் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர்த்தும். எல்லா தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். எல்லா பிரிவினருக்கும் ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இருப்பது போலவே தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. அதை கர்நாடகாவும் பின்பற்றி உள்ளது.

அதிலும் இதில் தமிழ்நாட்டை சித்தராமையா நேரடியாக எடுத்துக்காட்டி உள்ளார்.

சமீபத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கர்நாடகாவில் எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில்தான் இந்த இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

மாநில சுயாட்சி:

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாநில சுயாட்சி பற்றி பேசும் நிலையில், கர்நாடகாவிலும் காங்கிரஸ் இதை கையில் எடுத்துள்ளது. முக்கியமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வரி பங்கீட்டில் கர்நாடகாவிற்கு பெருவாரியான பங்கீட்டை திருப்பி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.

இது தமிழ்நாட்டில் திமுக வைத்து வரும் கோரிக்கை ஆகும். இதே விஷயத்தை அங்கே காங்கிரஸ் வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

பாஜக வாக்குறுதி:

முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி தெளித்தது.

அதன்படி,

  • நந்தினி நிறுவனத்தின் பால் அரை லிட்டர் இலவசமாக ஏழைகளுக்கு வழங்கப்படும்
  • கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புணரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
  • வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
  • ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
  • 5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழஙப்படும்.
  • ஏழைகளுக்கு விநாயகர் சதுர்த்தி, தீபாவளியன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.
  • 10 லட்சம் பேருக்கு கர்நாடகாவில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும்.
  • ஆகிய இலவச வாக்குறுதிகளை பாஜக அள்ளி வழங்கி உள்ளது.

குஜராத்:

  • குஜராத் சட்டசபை தேர்தலிலும் பாஜக இதே போல இலவசங்களை அள்ளிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
  • குஜராத் சட்டசபை தேர்தலிலும் இலவசங்களை தேசிய இலவச அளவில் எதிர்க்கும் பாஜக குஜராத்தில் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது.
  • குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பாஜக "Agresar Gujarat Sankalp Patra 2022" என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.
  • அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு, இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது.
  • தமிழ்நாட்டில் பைக் வழங்கும் திட்டத்தை காப்பி அடித்து பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்தது. இந்த இலவசங்கள் மூலம் ஆம் ஆத்மி மீது மக்கள் பார்வை திரும்பாமல் பாஜக பார்த்துக்கொண்டது. தேர்தலிலும் பாஜகவிற்கு இது பெரிய அளவில் உதவியது . அவங்க என்ன இலவசம் கொடுப்பது. நாங்கள் இலவசம் + இந்துத்துவா இரண்டையும் கொடுக்கிறோம் என்று பாஜக இரண்டு வகையான வாக்குறுதிகளையும் அள்ளிவிட்டு வென்றுள்ளது.
  • இதே அஸ்திரத்தை தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ், பாஜக களமிறக்கி உள்ளது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+