பெங்களூர் தேவனஹள்ளியில் 1,000 ஏக்கரில் புதிய ரயில் முனையம்.. எப்படி அமைய போகிறது.. என்னென்ன வசதிகள்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் நகரின் மையப்பகுதி என்றால் மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையம் தான். இந்த ரயில் நிலையம் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போல் மிகவும் முக்கியமான ரயில் நிலையம். இதற்கு அடுத்தபடியாக யஷ்வந்தபுரம், பையப்பனஹள்ளி ஆகிய ரயில் முனையங்கள் உள்ளன. அடுத்ததாக பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளியில் 2500 கோடி செலவில், 1,000 ஏக்கரில் புதிய ரெயில் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூர் நகரத்தில் தான் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல லட்சம் பேர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். பெங்களூர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஐடி தொழிலை தாண்டி, பேருந்து கட்டுமானம், ஜவுளி , கனரக உதிரிபாகங்கள் தொழிற்சாலைகள், கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

bangalore railway train

பெங்களூரில் எல்லா தொழில்களும் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள். இந்தியாவின் மிகவேகமாக வளரும் நகரங்களில் பெங்களூர் முக்கியமானது. இந்தியாவின் ஐடி தலைநகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இன்னும் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரில் கடந்த 20 வருடங்களை ஒப்பிடும் போது, வந்து செல்லும் ரயில்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. பெங்களூர் நகரைப்போலவே ரயில் நிலையமும் நெரிசலை சந்தித்து வருகிறது.

பெங்களூர் நகரை பொறுத்தவரை சென்னையைப் போலவே மூன்று ரயில் முனையங்களை கொண்டுள்ளது. முதல் மற்றும் முதன்மையான ரயில் முனையம் என்றால், அது மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையம் தான் தான். அடுத்தாக யஷ்வந்தபுரத்தில் ரயில் முனையம் அமைந்துள்ளது. மூன்றாவது ரயில் முனையம் பையப்பனஹள்ளியில் அமைந்துள்ளது. இதில் மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையம் மற்றும் யஷ்வந்தபுரம் ரயில் முனையம் நீண்ட காலமாகவே உள்ளன. மூன்றாவது ரயில் முனையமான பையப்பனஹள்ளியில் ரயில் முனையம் கடந்த ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது.

தொடர்ந்து ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெங்களூர் அருகே தேவனஹள்ளியில் 1,000 ஏக்கரில் ரூ.1,500 கோடி செலவில் புதிய ரயில் முனையம் அமைக்க தென்மேற்கு ரெயில்வே திட்டமிட்டிருக்கிறது. எலகங்கா, தேவனஹள்ளி, சிக்பள்ளாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் இந்த ரயில் முனையம் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு தேவனஹள்ளி பகுதியில் உள்ள புல்லஹள்ளி, குருராயணஓசூரு கிராமங்களை ஒட்டியுள்ள 400 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் முனையத்தில் 16 நடைமேடைகள், 20 இயங்காத ரயில்களை நிறுத்தும் வழிகள், 10 ரயில்களை தூய்மைப்படுத்தும் வழிகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேவனஹள்ளி ரயில் நிலையம் என்பது, பெங்களூர் சர்வதேச விமான நிலையமான, ம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைகிறது.

எனவே பெங்களூருக்கு ரயிலில் வருபவர்கள் எளிதாக சர்வதேச விமான நிலையம் போக முடியும். அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு வரவும் முடியும். முக்கிமயாக இந்த தேவனஹள்ளி ரயில் முனையம் பெங்களூரு-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைவதால் அந்த பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். அதேநேரம் அரசு அந்த பகுதி மக்களிடம் நிலத்தை கையகப்படுத்துவது என்பது சவாலானதாக இருக்கும் என்கிறார்கள். ஏனெனில் சரியான இழப்பீடு கிடைக்காது என்று கூறி இப்போதே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+