விசா இல்லாமல் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு போனது எப்படி? வெளியான தகவல்கள்!
பெங்களூர்: பல பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரது டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் விவாத புள்ளியாக மாறியுள்ளது. இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் என்றால் என்ன.. இதை யாரால் ரத்து செய்ய முடியும் என்பவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் என்பது நமது வழக்கமான பாஸ்போர்ட்களில் இருந்து வித்தியாசமானது. இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் பொதுவாக மெரூன் நிறத்தில் இருக்கும். சர்வதேச சட்டத்தின் கீழ் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு சில சலுகைகள் கிடைக்கும்.. குறிப்பிட்ட சிலருக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை வழங்கும்.

யாருக்கு: சரி யாருக்கெல்லாம் இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும்.. தூதர்களாக இருப்போர், வெளிநாட்டில் அரசுப் பணிக்காக நியமனம் செய்யப்பட்டோர், இந்திய வெளியுறவு துறையின் இணைச் செயலாளர் அந்தஸ்து அல்லது அதற்கு மேல் உள்ள மூத்த அதிகாரிகள், வெளியுறவு துறை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு தான் பொதுவாக இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
இது தவிர அரசு பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் குறிப்பிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களுக்கும் இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். அதன்படியே பிரஜ்வலுக்கு டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
எவ்வளவு காலம்: இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் பொதுவாக ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில் இருக்கும். பொதுவாக அவர்கள் பதவிக்காலம் எவ்வளவு காலம் இருக்குமோ அந்தளவுக்கே மட்டுமே இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் செல்லுபடியாவதாக இருக்கும்.
பொதுவாக நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் விசா தேவைப்படும்.. ஆனால், இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சில நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். ஜெர்மனியுடன் இந்தியாவுக்கு ஒப்பந்தம் இருப்பதாலேயே பிரஜ்வல் ரேவண்ணாவால் விசா இல்லாமல் ஜெர்மனி செல்ல முடிந்தது. டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களால் அதிகபட்சம் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் ஜெர்மனியில் இருக்க முடியும்.
விசா தேவையில்லை என்ற போதிலும், டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்போர் முன்கூட்டியே அரசியல் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.
கோரிக்கை: இந்தச் சூழலில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பாஸ்போர்ட் சட்டம் 1967இன் படி, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படலாம்.. அவை என்ன காரணங்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
எப்போது எல்லாம் ரத்து: இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை மோசடியான வழிகளில் பெற்றவர், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் திரும்பப் பெறப்படும். மேலும், இந்தியாவின் இறையாண்மை, பிற நாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றுக்கு அவசியமானதாகக் கருதப்பட்டால் திரும்பப் பெறலாம். அதேபோல நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தும் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறலாம்.
பொதுவாகக் கைது, வழக்கு தொடர்வது, வரி விலக்குகள் என டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை வைத்திருப்போருக்கு வேறு சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஜெர்மனியில் இருப்பதாகக் கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகக் கர்நாடக அரசு ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ப்ளூ கார்னர் நோட்டீஸ்: ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்பது இன்டர்போலின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாகும். குறிப்பிட்ட நபர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதே இந்த ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு, பச்சை, ஆரஞ்சு, ஊதா என மொத்தம் ஏழு டைப் எச்சரிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் ப்ளூ கார்னர் நோட்டீஸில் என்பது குற்றவியல் விசாரணைக்கு ஆளான ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்க விடுக்கும் கோரிக்கையாகும்.
பிரஜ்வலின் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் அவர் இந்தியா திரும்பியாக வேண்டும். இல்லையென்றாலும் கூட அவரால் அதிகபட்சம் 90 நாட்கள் வரை மட்டுமே அங்கு இருக்க முடியும். அதன் பிறகு இந்தியா திரும்பியாக வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications