அச்சு அசல் பாஜக முதல்வர் பசரவாஜ் பொம்மை டூப்ளிகேட்- கர்நாடகாவை அதிர வைக்கும் காங். பிரசார வீடியோ!
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ் வெளியிட்ட பிரசார வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் அந்த வீடியோவில் கர்நாடகா பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை போலவே ஒருவரை காங்கிரஸ் நடிக்க வைத்திருப்பதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்சி தாவல்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். கர்நாடகா தேர்தல் களமானது காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது என்கின்றன பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது. மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியானது ஒரு பிரசார வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இந்த பிரசார வீடியோதான் கர்நாடகா தேர்தல் களத்தில் இப்போது ஹாட் டாபிக்.

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, 40% கமிஷன் பெறுகிறது; ஆகையால் மொத்தம் 40 இடங்களை மட்டுமே அந்த கட்சிக்கு வாக்காளர்கள் கொடுக்க வேண்டும் என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனை வழிமொழியும் வகையில் 40% கமிஷனில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மை மூழ்கி திளைப்பது போல காட்சி அமைப்புடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலேட்டை பசவராஜ் பொம்மை கேரக்டர்தான். அப்படி அச்சு அசலாக முதல்வர் பசவராஜ் பொம்மையை போல இருக்கும் ஒரு நபரை தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறது காங்கிரஸ். சமூக வலைதளங்களிலும் இப்படி ஒரு டூப்ளிகேட் பசவராஜ் பொம்மை எப்படி கிடைத்தார் காங்கிரஸுக்கு என்பது நெட்டிசன்களின் கேள்வியாகவும் இருக்கிறது.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications