ஒண்ணு, இதோ ரெண்டு.. “திருப்பி கொடுக்கணும்ல”.. காங்கிரஸ் கணக்கு.. இது என்ன லிஸ்ட்டுனு பாருங்க!
பெங்களுர் : பாஜக 2019ல் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 25 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அதில் பாஜக ஆட்சி செய்த 3 மாநிலங்களில் தான் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. 1. ஜார்க்கண்ட் 2, இமாச்சல பிரதேசம். 3. கர்நாடகா. இதில், இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றி அரியணை ஏறியுள்ளது காங்கிரஸ்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியை அமைக்க உள்ளது.

2019க்குப் பிறகு 25 தேர்தல்கள் : 2019ல் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிறகு, அதுவும் 303 தொகுதிகளில் வென்று பெரும் பலத்தோடு மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய கையோடு, நாடு முழுவதுமுள்ள மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தோடு ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்துக் களமிறங்கியது. 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது.
இதில் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம், புதுச்சேரி, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி இந்த 25ல் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் தான் ஆட்சியைப் பிடித்திருந்தது. இந்த கணக்கில் தற்போது கர்நாடகாவும் சேர்கிறது. 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாவது மாநிலமாக கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
பாஜக ஆட்சி : 2019 அக்டோபரில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. 2019 சட்டசபைத் தேர்தலில் மகாராஷ்டிராவிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் கூட்டணியில் ஏற்பட்ட முரண்களால், சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க, பாஜகவைக் கழற்றி விட்டார் உத்தவ் தாக்கரே. எனினும் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணியை உருவாக்கி, உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து கடந்த ஆண்டு மீண்டும் பாஜக - ஷிண்டே அணி அரியணை ஏறியது.

2019ல் நடந்த ஜார்க்கண்ட் தேர்தலில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி மீதான கடும் எதிர்ப்பலையால் ஜார்க்கண்டில் ஆட்சியைப் பறிகொடுத்தது பாஜக. அதற்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் ஆம் ஆத்மியிடம் தோல்வியைத் தழுவினாலும், பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றது பாஜக. நிதிஷ் தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு அக்கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டதால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு காங்கிரஸுடன் கைகோர்த்தார் நிதிஷ் குமார்.
ஏறுமுகம் : கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அசாமில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த 5ல் பாஜக வெற்றி பெறாத 3 மாநிலங்களில் எங்குமே பாஜக முன்னரும் ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைப் பறித்தது ஆம் ஆத்மி கட்சி. இந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு சரிவே தவிர, பாஜகவுக்கு ஏறுமுகம் தான்.
இமாச்சலில் காங்கிரஸ் : 2022 டிசம்பரில் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசம் என இரு மாநில தேர்தலில் குஜராத்தில் அமோக வெற்றியைப் பெற்றது பாஜக. 2023 பிப்ரவரியில் நடைபெற்ற 3 மாநில தேர்தலில் திரிபுராவில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. மேகாலாயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாஜக இரண்டாவது முறையாக 2019ல் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த 4 ஆண்டுகளில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்கள் எனப் பார்த்தால் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றி அரியணை ஏறியது காங்கிரஸ். அதன்பிறகு தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றி வென்றிருக்கிறது காங்கிரஸ்.
ரெண்டாவது மாநிலம் : கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து ஏறுமுகம் கண்டு வரும் பாஜகவுக்கு இமாச்சல பிரதேசத்தில் முட்டுக்கட்டை போட்டது போல, தென்னிந்தியாவில் கர்நாடகாவில் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது காங்கிரஸ். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications