"இவங்கதான் கடவுள்".. பெங்களூர் டிராபிக்கில் சிக்கிய கார்! ஆபரேஷனுக்காக பல கிமீ ஓடிய மருத்துவர்! ப்பா
பெங்களூர்: பெங்களூர் டிராபிக்கில் கார் சிக்கிய நிலையில் மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கே வேகமாக ஓடிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூரில் மழை நாளாக இருந்தாலும் சரி.. மழை இல்லாத நாளாக இருந்தாலும் சரி.. டிராபிக் இயல்பாகவே அதிகமாக இருக்கும். அதிலும் வார இறுதி நாட்களில் டிராபிக் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கும்.
பெங்களூரில் ஏற்பட்டுள்ள இந்த டிராபிக்கை வைத்து இணையம் முழுக்க பல ஜோக்குகள் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் காமெடிகளை தாண்டி பெங்களூர் டிராபிக்கில் ஒரு இடத்திற்கு உடனே செல்வது என்பது அத்தனை எளிமையான காரியம் கிடையாது.
இதனால் பலர் பணி நிமித்தமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூர்
இந்த நிலையில் கடந்த வாரம் டாக்டர் கோவிந்த் நந்தகுமார் என்ற மருத்துவர் பெங்களூர் வெள்ளம் மற்றும் டிராபிக்கில் சாலையில் சிக்கி உள்ளார். சர்ஜாபூர் - மாரத்தஹள்ளி சாலையில் டிராபிக்கில் சிக்கி உள்ளார். சார்ஜ்கபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் இவர் பணியாற்றி வருகிறார். டிராபிக்கில் 15 நிமிடமாக் நின்றவர் எப்படியாவது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற டென்ஷனில் இருந்துள்ளார். காரணம் அவர் அன்று ஒரு அவசர laparoscopic gallbladder அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

டிராபிக்
எப்படியும் 15 நிமிடத்தில் சென்று விடலாம் என்று எதிர்பார்த்தால் போக போக டிராபிக் அதிகமாகி உள்ளது. கூகுள் மேப்பில் 1 மணி நேரம் காட்டி உள்ளது. இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளார். அவர் கார் டிராபிக்கில் நின்ற இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் மருத்துவமனை இருந்துள்ளது. காரில் சென்றால் 1 மணி நேரம் என்று காட்டி உள்ளது. அதுவே நடந்து சென்றால் அரை மணி நேரம் என்று காட்டி உள்ளது.

மருத்துவர்
டாக்டர் கோவிந்த் நந்தகுமார் உடனடியாக சென்று ஆபரேஷன் செய்ய வேண்டும். உடனே ஆபரேஷன் செய்யவில்லை என்றால் அந்த நோயாளியின் உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தும் அடுத்தடுத்து அவருக்கு போன் வந்துள்ளது . இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் காரை டிரைவரிடம் எடுத்து வரும்படி சொல்லிவிட்டு, அந்த டாக்டர் அங்கிருந்து இறங்கி ஓடி உள்ளார். கையில் பேக்குடன் வேகமாக ஓடி உள்ளார்.

சர்ஜரி
3 கிமீ தூரத்திற்கு டாக்டர் கோவிந்த் நந்தகுமார் ஓடி, வெள்ளத்தில் கஷ்டப்பட்டு நடந்து சென்று இவர் ஒரு வழியாக 30 நிமிடத்தில் மருத்துவமனை அடைந்துள்ளார். இது குறித்து டாக்டர் கோவிந்த் நந்தகுமார் கூறுகையில், என்னுடைய நோயாளிகள் எனக்காக காத்திருக்க கூடாது. அது தவறு. அதோடு ஆபரேஷன் முடியும் வரை அவர்கள் உணவு சாப்பிட கூடாது. அதனால் நான் வேகமாக ஆபரேஷன் செய்தாக வேண்டும்.

என்ன சொன்னார்?
என்னிடம் டிரைவர் இருக்கிறார். அதனால் காரை அவரிடம் எடுத்து வர சொல்லிவிட்டேன். அதனால் நான் வேகமாக ஓடினேன். நான் தினமும் ஜிம்மிற்கு செல்வேன். அதனால் எனக்கு ஓடுவது எளிதாக இருந்தது. ஓடி வந்ததால் சரியாக நேரத்திற்கு அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிந்தது. எனக்கும் திருப்தியாக இருந்தது, என்று டாக்டர் கோவிந்த் நந்தகுமார் கூறி உள்ளார். இவரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications