சித்தராமையா முதுகில் குத்த முடியாது.. ரகசிய மீட்டிங்கில் டிகே சிவக்குமாரிடம் நேரடியாக சொன்ன ஆதரவாளர்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை பிடிக்க துணை முதல்வர் டிகே சிவக்குமார் காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம் முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையா முயன்று வருகிறார். இந்நிலையில் தான் டிகே சிவக்குமார், சித்தராமையாவின் ஆதரவாளர்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதற்கிடையே தான் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளராக இருக்கும் அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி- டிகே சிவக்குமார் ஆகியோர் நள்ளிரவில் மீட்டிங் நடத்தி உள்ளனர். இந்த வேளையில் டிகே சிவக்குமார், சதீஷ் ஜார்கிகோளியிடம் ஆதரவு கோரிய நிலையில் அவர் சித்தராமையாவின் முதுகில் குத்த முடியாது என்று உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவியது.

இறுதியாக முதல்வர் பதவியை சித்தராமையா பெற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியோடு சேர்த்து துணை முதல்வர் பொறுப்பு டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
தற்போது இரண்டரை ஆண்டு கால ஆட்சியை டிகே சிவக்குமார் நிறைவு செய்துள்ளார். இதனால் மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலம் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இரண்டரை ஆண்டு கால முதல்வர் பதவி பகிர்வது பற்றி ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதன்படி சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும் டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இது கர்நாடகா அரசியலில் பெரும் அதிர்வலைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை பிடிக்கும் நோக்கில் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரி வருகிறார் டிகே சிவக்குமார்.
ஆனால் தற்போதைய சூழலில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள், டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் சித்தராமையாவின் பக்கமே உள்ளனர். அதுமட்டுமின்றி சித்தராமையாவின் ஆதரவாளர்களை தன்பக்கம் இழுக்க டிகே சிவக்குமார் முயன்று வருகிறார். அந்த வகையில் தான் தற்போது ரகசிய மீட்டிங் நடந்துள்ளது.
சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளர் சதீஷ் ஜார்கிகோளியை, டிகே சிவக்குமார் சந்தித்து பேசி உள்ளார். இந்த சதீஷ் ஜார்கிகோளி வடகர்நாடகா அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர். குறிப்பாக பெலகாவி தொகுதியில் அதிக செல்வாக்கு கொண்டவர். எமகனமரடி எனும் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள சதீஷ் ஜார்கிகோளி சித்தராமையாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். இவர் சித்தராமையாவின் தீவிர விசுவாசி.
சதீஷ் ஜார்கிகோளி கடந்த 2023 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தார். காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமார் செயல்பட்டார். டிகே சிவக்குமாரின் கீழ் சதீஷ் ஜார்கிகோளி செயல் தலைவராக பணியாற்றினார். சதீஷ் ஜார்கிகோளியின் செயல்பாடு மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.
இந்நிலையில் தான் சதீஷ் ஜார்கிகோளியை, டிகே சிவக்குமார் தனியாக சந்தித்துள்ளார். இருவரும் நள்ளிரவில் நீண்ட நேரமாக ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது டிகே சிவக்குமார், ‛‛5-6 தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் இறுதியானது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் பதவியை என்னிடம் ஒப்படைப்பதாக சித்தராமையா கூறினார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்'' என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை சதீஷ் ஜார்கிகோளி ஏற்க மறுத்துள்ளார். நான் எந்த காரணம் கொண்டும் சித்தராமையாவை விட்டு தர முடியாது. இந்த இக்கட்டான சூழலில் சித்தராமையாவுக்கு பக்கப்பலமாக தான் இருக்க வேண்டும். என்னால் அவரை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. என்னை பொறுத்தவரை காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை கேட்பேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
டிகே சிவக்குமாருக்கு சக்சஸ்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக்












Click it and Unblock the Notifications