எகிப்து அணியின் 2வது கோல் மறுக்கப்பட்டது ஏன்? 60வது நிமிடத்தில் நடந்தது என்ன? அர்ஜென்டினா சூழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

அட்லாண்டா: அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் எகிப்து அணி வீரர் முஸ்தபா ஸிகோ 60வது நிமிடத்தில் அடித்த கோல், நடுவர்களால் ஏன் மறுக்கப்பட்டது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் போட்டிகளில் ஒன்றாக இந்தப் ஆட்டம் அர்ஜென்டினா அணிக்கு அமைந்துள்ளது. இதனால் அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் எல்லையில் மிதந்து வருகின்றனர்.

Lionel Messi

ஆனால் இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் நடுவர்கள் மற்றும் VAR எடுத்த சில முக்கிய முடிவுகள் சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் 2-0 என பின்தங்கியிருந்த அர்ஜென்டினா அணி, கடைசி 14 நிமிடங்களில் 3 கோல்களை அடித்து த்ரில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியின் பின்னணியில் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக இரண்டாவது பாதியின் 60வது நிமிடத்தில், எகிப்து வீரர் முஸ்தபா ஸிகோ ஒரு சிறப்பான கவுண்ட்டர் அட்டாக் மூலம் கோல் அடித்தார். இதன் மூலமாக எகிப்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றதாக அனைவரும் கொண்டாடிய நிலையில், VAR தலையிட்டது. அந்த அட்டாக் தொடங்குவதற்கு மிக முன்பாக, என்ன நடந்தது என்பதை VAR சோதனை செய்தது.

அதில் எகிப்து அணியின் பகுதியில் அர்ஜென்டினா அணியின் லிசாண்ட்ரோ மார்டினெஸிடம் இருந்து பந்தை கைப்பற்றிய போது, ஃபவுல் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த கோல் நடுவரால் மறுக்கப்பட்டது. அதேபோல் 2ஆம் பாதியின் கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினா பாக்ஸில் எகிப்து வீரர் ஹம்டி ஃபாத்தி கீழே விழுந்தார்.

அர்ஜென்டினாவின் அணியின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் பின்னால் இருந்து இழுத்து கீழே தள்ளினார். எகிப்து வீரர்கள் பெனால்டி கேட்டு முறையிட்டும் பிரெஞ்சு நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் அதை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் VAR சோதனையும் செய்யவில்லை. இதனால் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் 60வது நிமிடத்தில் ஃபவுல் செய்துதான் எகிப்து வீரர் முஸ்தபா ஸிகோ பந்தை கைப்பற்றினார் என்பதற்கான ஆதாரங்கள் சரியாகவே இருக்கின்றன. இதனால் அந்த கோல் மறுக்கப்பட்டது சரியான முடிவு என்றே பார்க்கப்படுகிறது. இருப்பினும் எகிப்து அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+