யாரா இருந்தாலும் கை, கால்களை வெட்டுவேன்.. அரசு அதிகாரிகளை மிரட்டிய காங்.எம்எல்ஏ
பெங்களுரு:வனத்துறை அதிகாரியின் கை, கால்களை கண்டந்துண்டமாக வெட்டுவேன் என்று கர்நாடாகவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
சங்கமேஸ்வரா என்ற அந்த எம்எல்ஏ தான் இந்த மிரட்டலுக்கு சொந்தக்காரர் ஆவார். பத்ராவதி என்ற பகுதியில் கோயில் ஒன்றை எழுப்ப அப்பகுதி மக்கள் விரும்பியுள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோயிலை கட்டலாம் என்றும் அவர்கள் எண்ணியிருந்தனர்.

ஆனால், வனத்துறை சட்டத்தின் கீழ் கோயிலை நடத்த அனுமதி இல்லை என்று கூறி வனத்துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் எம்எல்ஏ சங்கமேஸ்வராவை சென்று சந்தித்து நிலைமையை விளக்கி உள்ளனர்.
வனத்துறை அதிகாரிகளின் தடையை கண்டு ஆவேசமடைந்த எம்எல்ஏ சங்கமேஸ்வரா, உடனடியாக கிராம மக்களுடன் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர் பேசிய பேச்சுகள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அவர் பேசியது இதுதான்:
கோயில் கட்டுவதை தடுக்கும் வனத்துறை அதிகாரி யாராக இருந்தாலும் கை, கால்களை வெட்டுவேன் என்று கர்ஜித்திருக்கிறார். கோயிலுக்கு அடிக்கல்லை நாட்டுவேன். கிராம மக்கள் கோயில் கட்டுமான பணிகளை தொடங்குவார்கள். எந்த அதிகாரியாவது தடுத்தால் கை, கால்களை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி ஒருமுறை சுட்டுத்தள்ளுங்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது அதேபோன்ற சர்ச்சை.. காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் பேச்சால் எழுந்திருக்கிறது.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications