கண்டிப்பா கன்னடம் பேசனுமா? எங்களுக்கு பெங்களூரே வேண்டாம்.. புனேவுக்கு இடம் பெயரும் ஐடி நிறுவனம்
பெங்களூர்: பெங்களூரில் கன்னடம் தான் பேச வேண்டும் என்று கூறி வருவதால் அடுத்த 6 மாதத்தில் எனது நிறுவனத்தை புனேவுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளேன். மொழி பிரச்சனையில் எனது ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று ஐடி நிறுவனத்தின் நிறுவனர் கவுசிக் முகர்ஜி அறிவித்துள்ளார்.
பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. நம் நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று தான் இந்த பெங்களூர். ‛இந்தியாவின் சிலிக்கான் வேலி' என்ற புனைப்பெயருடன் பெங்களூருவுக்கு உள்ளது. இதனால் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதில் ஒரு தரப்பினர் கன்னட மொழியை கற்று கொண்டுள்ளனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் கன்னடம் மொழி தெரியாமல் உள்ளனர். இதனால் சில வேளையில் அவர்கள் தங்களின் தாய் மொழி அல்லது ஆங்கிலத்தில் பேசுவது, பதிலளிப்பது என்பது சர்ச்சையாகிவிடுகிறது. பொது வெளியில் கூட இருதரப்பினர் இடையேயான மொழி பிரச்சனையாக மாறி உள்ளது.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யா நகரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை உள்ளது. இங்கு மேலாளராக இருக்கும் பெண் ஒருவருக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அந்த பெண் மேலாளர் ‛‛கன்னட மொழியை பேச மாட்டேன். இது இந்தியா. இந்தியில் தான் பேசுவேன்'' என்று ஆங்கில மொழியில் கூறினார். இதற்கு வாடிக்கையாளர், ‛‛இது கர்நாடகா. கன்னடத்தில் தான் பேச வேண்டும். ஆர்பிஐ விதியே உள்ளது'' என்று கூறினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த இந்த பிரச்சனை விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து அந்த பெண் மேலாளரை எஸ்பிஐ நிர்வாகம் இடமாற்றம் செய்ததோடு, நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தது.
இந்த விவகாரம் பூதாகரமானது. முதல்வர் சித்தராமையா உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியின் எம்பியாக இருக்கும் பாஜகவின் தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எஸ்பிஐ கிளையின் மேலாளரின் இந்த செயல் ஏற்க முடியாதது. கர்நாடகாவில் வங்கியில் மக்களுக்கான சேவை செய்கிறீர்கள் என்றால் வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களுடன் தொடர்பு கொள்வது முக்கியம். இப்படி பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.
வங்கிகளில் உள்ளூர் ஊழியர்கள் அல்லது உள்ளூர் மொழியை அறிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் பேசியுள்ளேன். இது இன்னும் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. உள்ளூர் மொழி தேவையை கட்டாயமாக்கும் கொள்கையை எஸ்பிஐ செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். தற்போதைய பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பேசியுள்ளேன். கர்நாடகாவில் செயல்படும் வங்கிகளின் ஊழியர்கள் கன்னடத்தில் கண்டிப்பாக பேச வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
தேஜஸ்வி சூர்யாவின் இந்த பதிவுக்கு பெங்களூரில் ஐடி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் கவுசிக் முகர்ஜி என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது நிறுவனத்தை பெங்களூரில் இருந்து புனேவிற்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவுசிக் முகர்ஜி,‛‛ பெங்களூரில் உள்ள எனது அலுவலகத்தை இன்னும் 6 மாதத்தில் மூடிவிட்டு புனேவிற்கு அலுவலகம் திறக்க உள்ளேன். மொழி சார்ந்த இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் கன்னடம் பேசாத எனது ஊழியர்கள் அடுத்ததாக பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால் எனது ஊழியர்கள் அலுவலகத்தை மாற்றும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications