"சாவர்க்கர் போஸ்டர்களை தொட்டால் கையை வெட்டுவோம்" பகிரங்கமாக மிரட்டும் கர்நாடக இந்து சேனா தலைவர்
பெங்களூர்: "சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரின் போஸ்டர்களை முஸ்லிம்கள் யாரேனும் தொட்டால் அவர்களின் கையை வெட்டுவோம்" என்று இந்து சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, ஆர்எஸ்எஸ் நிறுவனர் சாவர்க்கரின் பெயரை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றன. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும், அவரது பெயரை முந்தைய ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர் எனவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
ஆனால், பிரிட்டிஷாரிடம் பல முறை மன்னிப்புக் கேட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர் சாவர்க்கர் என்றும், காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

நேரு படம் இல்லை
இதனிடையே, கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களுடன் கர்நாடகா அரசு ஒரு பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டது. அதில், சாவர்க்கரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

சாவர்க்கர் போஸ்டர்கள் கிழிப்பு
இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கரின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதன் விளைவாக பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்களும் அரங்கேறின. இந்த சூழலில், வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கர்நாடகா முழுவதும் சாவர்க்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் போஸ்டர்கள் வைக்கப்படும் என இந்து அமைப்புகள் நேற்று அறிவித்தன.

பிரமோத் முத்தாலிக்
இந்நிலையில், இதுதொடர்பாக இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பெங்களூருவில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், "சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரின் பங்களிப்பையும், அவரது பெருமையையும் நாடு முழுவதும் பரப்புவோம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல. பிரிட்டாஷாருக்கு மட்டுமே எதிரானவர்.

வெட்டி எறிவதாக எச்சரிக்கை
இந்த முறை நாங்கள் வைக்கும் சாவர்க்கரின் போஸ்டர்களை எந்த முஸ்லிம் நபரோ அல்லது காங்கிரஸை சேர்ந்தவரோ தொட்டால் அவர்கள் கையை நாங்கள் வெட்டி எறிவோம். இதனை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்" எனக் கூறினார். பிரமோத் முத்தாலிக்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications