Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரா.. சித்தராமையாவால் காங்கிரசில் பரபரப்பு.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் கட்சி மேலிடம் டிகே சிவக்குமாரை முதல்வராக்காது என சித்தராமையா கூறியதாக செய்திகள் பரவி வருகின்றன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ம் ஆண்டில் தேர்தல் நடந்தது. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது மே மாதம் 13 ம் தேதி நடக்கிறது. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி

பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி

தற்போதைய சூழலில் கர்நாடகாவில் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இருப்பினும் தேர்தலில் நேரடியான போட்டி என்பது 4 கட்சிகளுக்கு இடையே தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் ஓல்டு மைசூர் மண்டலத்தில் தான் பிரபலமாக உள்ளது. இதனால் கர்நாடகா தேர்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே தான் ஆட்சியை பிடிப்பது யார்? என்பதில் போட்டி இருக்கும்.

தற்போதைய சூழலில் பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியல் மற்றும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மாறாக காங்கிரஸ் முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களும், முதல்வர் வேட்பாளரையும் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மற்றும் தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளனர். இதனை அவர்கள் மேடையிலேயே வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

சித்தராமையா பேட்டி

சித்தராமையா பேட்டி

இந்நிலையில் தான் சித்தராமையா இந்தியா டூடேவுக்கு அளித்த பேட்டியில், ‛‛கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நான் 100 சதவீதம் நான் முதல்வர் வேட்பாளராக இருக்கிறேன். அதேபோல் டிகே சிவக்குமாரும் முதல்வர் வேட்பாளராக உள்ளார். இந்த போட்டியில் பரமேஸ்வர்(முன்னாள் துணை முதல்வர்) இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. இருப்பினும் முதல்வர் பதவி மீது அவருக்கு இருக்கும் ஆசையை முந்தைய காலங்களில் வெளிப்படுத்தி உள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.

ஜனநாயக முறைப்படி

ஜனநாயக முறைப்படி

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தற்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் யார் என்பதை எம்எல்ஏக்கள் தான் முடிவு செய்வார்கள். தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் என்று யாருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. இது வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி மேலிடத்தின் முடிவையே சார்ந்து இருக்கும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் தேர்வு என்பது ஜனநாயக முறைப்படியே நடக்கும்'' என தெரிவித்து இருந்தார்.

ஊடகங்களில் வெளியான செய்தி

ஊடகங்களில் வெளியான செய்தி

மேலும் இதுபோல் சில கருத்துகளை சித்தராமையா தெரிவித்து இருந்தார். இதற்கிடையே தான் ‛‛நான் கர்நாடகா காங்கிரஸில் முதல்வர் வேட்பாளராக இருக்கிறேன். அதேபோல் டிகே சிவக்குமாரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளார். இருப்பினும் கட்சி மேலிடம் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்காது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்போது எம்எல்ஏக்கள் கூடி தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். இதில் கட்சி மேலிடம் தலையிடாது'' என சித்தராமையா தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

காங்கிரஸில் பரபரப்பு

காங்கிரஸில் பரபரப்பு

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் தேர்தல் நடக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியினர் முதல்வர் பதவிக்கு சண்டை போட துவங்கிவிட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் இந்த செய்தி டிகே சிவக்குமார் தரப்பினரையும் அப்செட்டாக்கியது. மேலும் இந்த செய்தி கர்நாடகா அரசியலில் பூதாகரமானது. குறிப்பாக காங்கிரஸ் வளையத்தில் பேசு பொருளானது.

சித்தராமையா விளக்கம்

சித்தராமையா விளக்கம்

இந்நிலையில் தான் சித்தராமையா அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛டிகே சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்காது என நான் ஒருபோதும் கூறவில்லை. நானும், அவரும் முதல்வர் பதவியை விரும்புகிறோம். இதில் எம்எல்ஏக்கள், கட்சி மேலிடத்தின் முடிவு தான் இறுதியானது என தெரிவித்தேன். ஆனால் தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது'' என விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+