குஜராத்தை மாதிரி.. கர்நாடகாவில் பகவத் கீதை பள்ளிப் பாடத்தில் இடம்பெற நடவடிக்கை.. அமைச்சர் உறுதி
பெங்களூர்: கர்நாடக பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக்க சேர்க்க அனுமதி கிடைத்தால் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்வோம்'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் கூறினார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் பிசி நாகேஷ் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாடமாக பகவத் கீதை
குஜராத்தை போன்று கர்நாடகத்திலும் அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதையை பாடமாக அறிமுகம் செய்யும் எண்ணம் துவக்க நிலையில் உள்ளது. இதுகுறித்து முதல்வர், மாநில பாடநூல் கமிட்டி, நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக்க முடியும். இதனால் 2022-2023 கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டு வர சாத்தியமில்லை.

அடுத்த கல்வியாண்டில்
பகவத் கீதை இந்துக்களுக்கு மட்டும் உரியது இல்லை. இது பொதுவானது. அனைத்து மக்களுக்குமானது. இதனால் முறையான அனுமதி கிடைத்தால் அடுத்த கல்வியாண்டில் இருந்து பாடமாக அறிமுகம் செய்யலாம். இதன்மூலம் அறநெறி அறிவியல் (மாரல் சயின்ஸ்) பாடங்கள் தற்போது மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது இல்லை என்ற குற்றசாட்டும் கைவிடப்படும்.

முன்னாள் முதல்வர் வரவேற்பு
இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பகவத் கீதையை படித்து வாழ்க்கைக்கான கொள்கைகளை எடுத்து கொண்டால் ஒவ்வொருவரும் மேம்பாடு அடையலாம். பகவத் கீதை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது'' என தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் அறிமுகம்
குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க குஜராத் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் கதைகள், பாராயணம் வடிவில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications