கொரோனா: பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து இளவரசி டிஸ்சார்ஜ்
பெங்களூரு: கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகால தண்டனையை 3 பேரும் நிறைவு செய்துள்ளனர்.

சிறையில் இருந்த போது சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் பெங்களூருவில் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார் சசிகலா. இதனிடையே சசிகலாவுடன் சிறையில் இருந்ததால் இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இளவரசியும் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார். பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் இளவரசி, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் நடைமுறைகள் நிறைவடைந்ததும் அவரும் விடுதலை செய்யப்படுவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications