விவாகரத்தான பெண்ணுடன் உல்லாசம்.. திருமணத்துக்கு வலியுறுத்தியதால் கள்ளக்காதலன் வெறிச்செயல்.. போச்சு
பெங்களூர்: பெங்களூரில் விவாகரத்தான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனியார் நிறுவன ஊழியர் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி பிரஷர் போட்டதால் கோபமான தனியார் நிறுவன ஊழியர் அவரை தனியாக அழைத்து சென்று கத்தியால் 6 முறை குத்தி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் கேஜி ஹள்ளியில் உள்ள பில்லண்ணா கார்டனில் வசித்து வந்தவர் ரேணுகா.இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தான் ரேணுகாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்தனர். நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியது.

இதையடுத்து ரேணுகா தனது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த வேளையில் தான் பைானன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அம்பேத்கர் என்ற குட்டாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் முதலில் நட்பானது.
ரேணுகாவும், குட்டாவும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். இருவரும் செல்போனில் பேசி வந்தனர். நாளைடைவில் இந்த பழக்கம் அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.குட்டா, ரேணுகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர். இருவரும் வெளியே அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
மேலும் ரேணுகாவின் வீட்டுக்கும் குட்டா சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இப்படியான சூழலில் தான் இருவருக்கும் பிரச்சனை வந்துள்ளார். குட்டாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரேணுகா கூறியுள்ளார். ஆனால் குட்டா ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையேயான பிரச்சனை உச்சமடைந்துள்ளார். குட்டாவை பார்த்து, ‛‛என்னை டைம்பாஸ்க்கு தான் காதல் செய்கிறார். இனியும் தாமதிக்க வேண்டாம். முறைப்படி திருமணம் செய்து கொள்' என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் குட்டா கோபமடைந்துள்ளார்.
அதன்பிறகு சம்பவத்தன்று வேலைக்கு சென்று ரேணுகா வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை குட்டா வழிமறித்துள்ளார். ‛‛உன்னிடம் தனியாக பேச வேண்டும்'' என்று கூறினார். இதை நம்பி ரேணுகா, குட்டாவுடன் சென்றார். பில்லண்ணா கார்டனில் உள்ள அரசு பள்ளி அருகே அழைத்து சென்றார். அங்கு வைத்தும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரேணுகா கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த குட்டா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேணுகாவை 6 முறை குத்திவிட்டு ஓடிவிட்டார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட ரேணுகா உயிருக்கு போராடினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரேணுகாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரேணுகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரேணுகா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கேஜி ஹள்ளி போலீசார் குட்டா மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications