நாட்டையை உலுக்கிய அந்த சம்பவம்! கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ்களில் ‛பேனிக் பட்டனுடன் வரும் புதுவசதி! செம
பெங்களூர்: டெல்லியில் கடந்த 2012ல் ஓடும் பஸ்சில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடகா அரசு தற்போது முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது இரவில் தனியார் பஸ்சில் பயணித்த இளம்பெண்ணை 6 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது. நிர்பயா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த பிறகு நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்ய தொடங்கின. மேலும் மத்திய அரசு சார்பில் ‛நிர்பயா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் ஓடும் பிஎம்டிசி பஸ்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‛பேனிக் பட்டன்' எனும் அவரச உதவிக்கான பொத்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பஸ்களில் பயணிக்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த பொத்தானை அழுத்துவதன் மூலம் உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை கர்நாடகா முழுவதும் விரிவுப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் ஓடும் அனைத்து கேஎஸ்ஆர்டிசி பஸ்களிலும் ‛பேனிக் பட்டன்' எனும் அவசர உதவிக்கான பொத்தான் அமைக்கப்பட இந்த பொத்தானை ஆபத்து சமயத்தில் அழுத்தும்போது நேரடியாக போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும். அங்கிருந்து பஸ் செல்லும் இடத்தின் அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பஸ்களின் இருப்பிடம், பஸ்கள் இயங்குகள் வேகம் உள்ளிட்டவற்றை இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். அதோடு பயணிகளும் ஜிபிஎஸ் உதவியுடன் பஸ்களின் வருகை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். அரசு பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டத்திற்காக தனியே செயலி ஒன்றும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலியை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் பஸ்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியும்.
அதாவது இந்த திட்டத்தை கேஎஸ்ஆர்டிசி பஸ்களில் அறிமுகம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து கழகத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் திட்டத்தின் செலவில் 70 சதவீதம் பங்களிப்பதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 30 சதவீத தொகையை கர்நாடகா அரசு வழங்க வேண்டி இருக்கும். இந்த திட்டம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக கர்நாடகா சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் எச்கே பட்டீல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் பெங்களூரில் ஓடும் பிஎம்டிசி பஸ்களில் பேனிக் பட்டன் வசதி உள்ளது. கேஎஸ்ஆர்டிசி பஸ்களில் பேனிக் பட்டன் அமலுக்கு வர உள்ளது. மாறாக கல்யாண் கர்நாடகா போக்குவரத்து கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடகா போக்குவரத்து கழகங்கள் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இன்னும் தயார் செய்யவில்லை. இதனால் அந்த போக்குவரத்து கழக பஸ்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் பிரச்சனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications