"கள்ளக்காதலன் தான் வேண்டும்".. வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய இளைஞருக்கு மனைவி கொடுத்த ஷாக்!
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து மலேசியாவில் பணியாற்றி வந்தார். மலேசியாவில் இருந்து மனைவியை பார்க்க சொந்த ஊர் வந்த இளைஞரிடம், ''உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. எனக்கு கள்ளக்காதலன் தான் வேண்டும். நீ செத்துபோ'' என்று கூறினார். இதனால் மனம் நொந்துபோன அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் தாண்டலி டவுனை சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 32). இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராகவேந்திரா வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

ராகவேந்திரா மலேசியாவில் தங்கி வேலை செய்து வந்தார். ராகவேந்திராவின் மனைவி 2 குழந்தைகளுடன் தாண்டலியில் வசித்து வந்தார். மேலும் அடிக்கடி அவர் தனது தாய் வீட்டுக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில் தான் ராகவேந்திரா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். அப்போது அவரது மனைவி தாண்டலியில் இருந்து தனது தாய் வீட்டுக்கு சென்றவர் மீண்டும் வரவில்லை. ராகவேந்திரா அழைத்தும் கூட அவர் மறுத்துவிட்டார். ஏன் என்று கேட்டபோது, அவர் ராகவேந்திரா உடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறினார். ஏதோ தன் மீதான கோபத்தில் மனைவி இப்படி செய்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று ராகவேந்திரா நினைத்தார்.
ஆனால் அவரது மனைவி மனம் இறங்கி வரவில்லை. இந்த சமயத்தில் தான் அவரது மனைவி, ராகவேந்திராவிடம், ''உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. உன்னுடன் குடும்பம் நடத்த விரும்பவில்லை. எனக்கு காதலன் இருக்கிறான். அவனுடன் தான் வாழப்போகிறேன்'' என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை ராகவேந்திராவின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி உள்ளார். அப்போது தான் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் தனது மனைவிக்கும், இன்னொருவருக்கும் கள்ளக்காதல் உருவானதை ராகவேந்திரா உணர்ந்தார். இதனால் அவர் மனம் நொந்து போனார்.
இருப்பினும் மனைவியை சமாதானம் செய்ய சென்றார். ''இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்துக்காக நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்'' என்று கெஞ்சினார். ஆனால் அவரது மனைவி மறுத்துவிட்டார். ''எனக்கு உன்னுடன் வாழ விரும்பவில்லை. நீ செத்துப்போய் விடு'' என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
இதனால் நொந்துபோன ராகவேந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாக அவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், ''எனது சாவிற்கு மனைவி தான் காரணம். கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்கினார். கள்ளக்காதலன் பற்றி என்னிடம் வெளிப்படையாக பேசி மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார்'' என்று கூறியுள்ளார். இதுபற்றி தாண்டலி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications