கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: லோக்சபா தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவக்குமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக உள்ள டி கே சிவக்குமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கான பின்னணி குறித்து இங்கே பார்க்கலாம்.

கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிகே சிவக்குமாரை பொறுத்தவரை கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தனி ஆளாக நின்று நெருக்கடியை சமாளிக்க கூடியவர் என்ற பெயரை பெற்றவர்.

Income Tax department again notices Karnataka Deputy CM DK Shivakumar What is the reason

அதாவது, பாஜகவின் குதிரை பேரத்தை முறியடித்து காங்கிரஸ் எம் எல் ஏக்களை அணி மாற விடாமல் தடுப்பதில் வல்லவர் என்ற பெயரை பெற்றவர் டிகே சிவக்குமார். அத்துடன் இவருக்கு கர்நாடகாவிலும் தனி செல்வாக்கு உள்ளது. டிகே சிவக்குமாருக்கு தேர்தல் சமயத்தில் நெருக்கடி கொடுப்பதன் மூலம், தென்னிந்தியாவில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும் என்பதால், டிகே சிவக்குமாருக்கு பாஜக, விசாரணை அமைப்புகள் மூலம் நெருகக்டி கொடுப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

முன்னதாக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து பேசிய டிகே சிவக்குமார், வருமான வரித்துறையினரிடமிருந்து நேற்று இரவு எனக்கு நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் "இந்தியா" கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" இவ்வாறு கூறியிருந்தார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்க பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியது. தேர்தல் செலவினங்களுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த நிலையில், 2017-18 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் அபராதமாக ரூ. 1,823.08 கோடியைச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் தான் வருமானவரித் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி ரூ.200 கோடி அபராதம் விதித்த நிலையில், இப்போது ரூ.1700 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ. 1700 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதைக் கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்த உத்தரவு வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையின் இந்த உத்தரவு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படும் டிகே சிவக்குமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+