அமெரிக்கா VS இந்தியா.. மருத்துவ துறையில் எது சிறந்தது? NRI கொடுத்த எதிர்பார்க்காத பதில்! டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கல்வி, வேலைவாய்ப்பில் அமெரிக்கா சிறந்த ஒரு நாடாக இருந்தாலும், அங்கு மருத்துவக் கட்டமைப்பு மிக மோசமாகவே இருக்கிறது. சாதாரண மக்கள் சிகிச்சை பெற முடியாத அளவுக்கு மருத்துவச் செலவுகள் உச்சத்தில் இருப்பதாகச் சாடுகிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் வசித்த இந்தியர் ஒருவர், அங்குள்ள மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை விளக்கியுள்ளார். அவருக்கு போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காகப் பல லட்சம் வெளிநாட்டினர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் விரும்பி செல்லும் ஒரு நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் பல விஷயங்களை இந்தியர்கள் பாராட்டினாலும், அங்குள்ள மருத்துவ உட்கட்டமைப்பைப் பலரும் விமர்சிக்கவே செய்வார்கள்.

India Cured Me NRI Returns After 10 Years in US Slams Expensive American Healthcare System

மருத்துவ இன்சூரன்ஸ்

மருத்துவ இன்சூரன்ஸ் இருந்தாலே கூட அங்குக் கணிசமான பணம் செலவாகும். இன்சூரன்ஸ் இல்லை என்றால் சிறு சிகிச்சைக்கே சொத்தை எழுதி வைக்க நேரிடும். அந்தளவுக்கு மருத்துவச் செலவுகள் அங்கு அதிகம். இதைப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்கள். இதற்கிடையே பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்த என்ஆர்ஐ இந்தியர் ஒருவர், இந்தியாவுக்குத் திரும்பிய பிறகே தான் குணமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியது தனக்கு வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தருணம் என்று அந்த என்ஆர்ஐ தெரிவித்துள்ளார். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு அமெரிக்கா மிகச் சிறந்த நாடாக இருந்தாலும் அங்கு மருத்துவக் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதாக அவர் விமர்சித்தார். அமெரிக்க மருத்துவமனைகள் எப்போதும் நோயாளிகளின் நலனை விட லாபத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். ஒவ்வொரு நபரையும் பணம் கறக்கும் இயந்திரங்களாகவே அமெரிக்க மருத்துவமனைகள் பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார்..

என்ஆர்ஐ

இது தொடர்பாக அவர் தனது ரெட்டிட் பக்கத்தில், "நிஜமாகச் சொல்கிறேன்.. இந்தியா தான் என்னைக் குணப்படுத்தியது. நான் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். எனது கல்விக்கும், பணிக்கும் அது சிறந்த நாடாக இருந்தது. இருப்பினும், எனது சொந்த வீட்டையும் குடும்பத்தையும் மிஸ் செய்தேன்.

அங்கு டேட்டா சயின்ஸ்ட்டாக வேலை செய்து வந்தேன். 2017ல் எனக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கியது.. அதன் பிறகே அமெரிக்க மருத்துவ முறையில் உள்ள குறைபாடுகள் தெரிய ஆரம்பித்தது. அமெரிக்க மருத்துவ அமைப்பில் பல பயமுறுத்தும் சொற்களும், வாக்கியங்களும் உள்ளன. அவை சாதாரணப் பிரச்சனைகளைக் கூட மிகவும் சிக்கலானதாகவும், அச்சுறுத்துவதாகவும் தோன்ற வைக்கின்றன.

அமெரிக்க மருத்துவ உட்கட்டமைப்பு

கடந்த 2018ல் எனக்கு ஸ்கிசோ- அபெக்டிவ் கோளாறு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆனால், இது எனது வேலையைப் பாதிக்கவில்லை. அலுவலகத்தில் தொடர்ந்து புரோமஷன்கள் கிடைத்தன. எனக்கு ஸ்கிசோஃப்ரினியா இருந்திருந்தால் படிப்பை முடித்து, வேலையில் சாதித்து இருக்க முடியாது. ஏனென்றால் ஸ்கிசோஃப்ரினியா உள்ளவர்களுக்குக் கற்பனையும் மாயத் தோற்றங்களும் ஏற்படத் தொடங்கும். எனவே, அமெரிக்க மருத்துவர்கள் சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எல்லாம் சரியாகிவிட்டது

இதனால் நான் இரண்டாவது ஒபினியன் பெற, பெங்களூரில் உள்ள பிரபல மனநல மருத்துவமனையை அணுகினேன். என் ஸ்கிசோ-அபெக்டிவ் கோளாறு சில காலமாகவே குறைந்து வருவதாக அந்த மருத்துவர் தெரிவித்தார். அவர்கள் சொன்னதைக் கேட்டேன். உடல்நிலையும் மனநிலையும் வெகுவாக முன்னேறியது. இப்போது எனக்கு ஏற்போடும் ஒரே கோளாறு, அவ்வப்போது ஏற்படும் பதற்றம் மட்டுமே!

பணம் கறக்கும் இயந்திரம் இல்லை

எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டேன். இப்போது சில மாதங்களில் நான் குணமடைந்துவிட்டேன். இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆரம்பித்தவுடன் பிரச்சனை சரியானது. நோயாளிகள் நலனில் அக்கறை கொண்ட, என்னைப் பணம் கறக்கும் இயந்திரமாகக் கருதாத மருத்துவ அமைப்பில் நான் சிகிச்சை பெற்றதே இதற்கு காரணமாகும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் பலரும் இவரது கருத்தை ஆமோதிக்கிறார்கள். அமெரிக்காவின் மருத்துவச் செலவுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+