பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிலேயே முதல் முறையாக பெங்களூரில் பிட்காயின் ஏடிஎம்.. அப்புறம் என்ன ஆனது தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் முறையாக பெங்களூரில் பிட்காயின் ஏடிஎம், இணை நிறுவனர் கைது-வீடியோ

    பெங்களூர்: இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பிட் காயின் ஏடிஎம் நிறுவப்பட்டது. இதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் அதை அகற்றியதோடு நிறுவனத்தின் இணை நிறுவனரை கைது செய்துள்ளனர்.

    பிட்காயின் போன்ற வர்த்தகத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், இதுபோன்ற ஒரு ஏடிஎம் மையம் பெங்களூரில் திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரின் எச்ஏஎல் பகுதியில் உள்ள கெம்ப் போர்ட் மால் பகுதியில் இந்த ஏடிஎம் கடந்தவாரம் நிறுவப்பட்டது.

    [ரூ.7.34 கோடியை அப்படியே தூக்கி கொடுத்த துபாய்.. இந்தியருக்கு கிடைத்த பம்பர் பரிசு ]

    சைபர் கிரைம்

    சைபர் கிரைம்

    "யுனோகாயின் (Unocoin) என்ற நிறுவனம் சார்பில் கெம்ப் போர்ட் மாலில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டது. இதற்காக மாநில அரசிடமிருந்து எந்த ஒரு அனுமதியும் அந்த நிறுவனம் பெறவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது" என்று சைபர் கிரைம் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணை நிறுவனர்

    இணை நிறுவனர்

    யுனோகாயின் இணை நிறுவனரான ஹரிஷ் என்ற 37 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து, 1 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்களை பறிமுதல் செய்ததோடு, இரண்டு லேப்டாப்புகள், ஒரு மொபைல் போன், மூன்று கிரெடிட் கார்டுகள், ஐந்து டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட் ஐந்து நிறுவனங்களின் சீல்கள் உள்ளிட்டவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

    இந்தியாவின் முதல் பிட்காயின் ஏடிஎம்

    இந்தியாவின் முதல் பிட்காயின் ஏடிஎம்

    ஹரீஷ் பெங்களூரு முதலாவது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பிட் காயின் ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்வது, மற்றும் எடுத்துக் கொள்ளும் வசதி இருந்தது. இதுதான் இந்தியாவின் முதலாவது பிட் காயின் ஏடிஎம் என்ற பெயரை பெற்றது.

    இப்படியா செய்வது

    இந்த ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது குறித்து, யுனோகாயின் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தோடு தகவல் வெளியிட்டிருந்தது. ரிசர்வ் வங்கியே தடை செய்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக செய்யும் தைரியம் இவர்களுக்கு எங்கே இருந்து வருகிறது?

    English summary
    A 37-year-old man was arrested here on Tuesday for running bitcoin ATM kiosk, which police called illegal in Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X