எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020: இறுதி போட்டியில் அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்..முழு லிஸ்ட்
பெங்களூர்: எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020ன் (SIFF Young Artiste Festival 2020) முதல் சீசன் வெற்றியாளர்களின் பெயர்கள் கடந்த செப்டம்பர் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாபெரும் விழாவில் தமிஷ் புல்லப்பாடி கிட்டார் பிரிவிலும், அக்ஷிதா சிங் சவுகான் பாடல் பிரிவிலும், ஜான்கி டிவி பரதநாட்டியம் பிரிவும் விருதுகளை வென்றனர். பல பிரபலங்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நடனம் மற்றும் இசை மேற்கண்ட வெற்றியாளர்களை தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
இந்த இறுதிச்சுற்று விழாவில் டாக்டர். எல் சுப்பிரமணியம், நிகிதா காந்தி, டெரன்ஸ் லூயிஸ், ஷால்மாலி கோல்கடே, எஹ்சான் நூரானி, ஷோவனா நாராயண் மற்றும் தி பிளாக் ஐஸ் க்ரூ இசைக்குழு ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி ஆதித்ய நாராயண் மூலம் தொகுத்து வழங்கப்பட்டது.

இதில் மக்கள் தேர்வாளர் விருதான People's Choice விருது பிரிவில் மொத்தம் 22 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. அதிக வாக்குகள் பெற்ற ஆட்மிக் குப்தா என்ற ஜெய்ப்பூர் சேர்ந்த டிரம்ப் கலைஞருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவருக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது.
இந்த போட்டி குறித்து பேசிய எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் 2020ன் இணை நிறுவனர் கவிதா ஐயர், கடந்த சில மாதங்களாக எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் மூலம் நாடு முழுக்க பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு விருப்பமான துறையில் ஜொலிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. தங்கள் துறைகளில் திறமையை வெளிப்படுத்தி இவர்களுக்கு இந்த விழா மேடை ஏற்படுத்திக்கொடுத்தது. முக்கிய இறுதி போட்டியில் எல்லா கலைஞர்களும் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தினார்கள், என்று குறிப்பிட்டார்.
இசை மற்றும் நடனத்தை கொண்டாடும் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் தேசிய அளவில் பலர் வெற்றிபெற்றனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற இவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
தேசிய அளவில் பிரிவு வாரியாக வெற்றிபெற்றவர்களின் விவரம்:
- பரதநாட்டியம்: ஜான்கி டிவி, உடுப்பி கர்நாடகா
- பாலிவுட்: மான்சி துருவ் ராஜ்கோட், குஜராத்
- கர்னாடிக் வயலின்: பிஎஸ் நரேந்திரன் ஆலப்புழா, கேரளா
- கர்னாடிக் பாடல்: ஷியாம் க்ரிஷ்னா சதீஷ் பெங்களூர், கர்நாடகா
- கண்டெம்ப்ரரி: விஷால் குமார் யாதவ், டார்ஜிலிங், மேற்கு வங்கம்
- டிரம்ஸ்: டிஆர் நிகில், சென்னை, தமிழ்நாடு
- புல்லாங்குழல்: மோகன் கிருஷ்ணன், பரிதாபத், ஹரியானா
- கிட்டார்: Tamish Pulappadi from Bangalore, கர்நாடகா
- இந்துஸ்தானி பாடல்: ஷ்ரேயா வீ மூர்த்தி, பெங்களூர், கர்நாடகா
- ஹிப் ஹாப்: அமான் ஜெய்ஷ்வால், பாட்னா, பீகார்
- இந்தியன் பாடல்: அக்ஷிதா சிங் சவுகான், உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்
- கதக்: அனன்யா கார் உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்
- மிருதங்கம்: கேபிஎஸ் கார்த்திகேய ஆதிநாராயணா, கிருஷ்ணா, ஆந்திர பிரதேசம்
- ஒடிசி: மேகனா மிஸ்ரா, ரூர்கேலா
- பியானோ/கீபோர்ட்: சாத்விக ஆர் பரத்வாஜ், ஹாசன், கர்நாடகா
- சித்தார்/ சரோத்:ஆரோன்யா நந்தன், கொல்கத்தா, மேற்கு வங்கம்
- தபேலா: உஜித் உதயா, டெல்லி
- மேற்கு வயலின்: அந்தியா கியாஸ், மார்கோ டாலஸ்ட், கோவா
- வெஸ்டர்ன் பாடல்: டெய்சுவாங்லுங் கமேய், மணிப்பூரின் இம்பால் கிழக்கு
கடைசி 100 போட்டியாளர் மொத்தம் 3 கட்ட சுற்றுக்கு பின் 12 ஆயிரம் பேரில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் சோதிக்கப்பட்டு, அவர்கள் கடுமையான போட்டிகளுக்கு உட்படுத்தப்பட்டு கடைசியில் ஜட்ஜ்கள் இந்த 100 பேரை தேர்வு செய்தனர். பின் இவர்களுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. வெற்றியாளர்கள் போக இறுதிப்போட்டிக்கு வந்த எல்லோருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்தியா முழுக்க பல்வேறு பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்கள், கிராமங்கள் என்று பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பலர் இந்த போட்டிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த போட்டி என்பது வெறும் போட்டியாக இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 100 பேருக்கு சித்தாந்த பயிற்சி வழங்கும் வாய்ப்பாகவும் அமைந்தது. அடுத்த கட்டத்திற்கு தேர்வான 100 பேருக்கு இளம் கலைஞர்களுக்கான வழிகாட்டுதல் வகுப்புகள் மூலம் (The Young Artiste Advanced Mentorship Programme - YAMP) பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு டாக்டர் எல் சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி, மாதவி முட்கல் மற்றும் பல கலைஞர்கள் பயிற்சி அளித்தனர். எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஸ்பான்சர்ஷிப் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் 2020-21 தேசிய அளவிலான போட்டி கடந்த ஜனவரி 2020ல் தொடங்கியது. தேசம் முழுக்க இருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கும் விதமாகவும் போட்டிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 20 வெவ்வேறு பிரிவுகளில் பாடல், நடனம், இசை கருவிகள் வாசிப்பு என்று பல போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த முதல் சீசனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதால் இரண்டாவது சீசனை 2022ல் நடத்தும் திட்டத்தில் எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் உள்ளது.
நாடு முழுக்க கலைஞர்களை உருவாக்கும் வகையிலும், பல்வேறு கலைகளை ஆதரிக்கும் வகையிலும் எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் மூலம் இளம் கலைஞர்கள் கோர்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு கலைஞர்களுக்கு இந்த துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். ஆரம்பகட்ட கலை கல்வி, இரண்டாம் கட்டம், இறுதிக்கட்டம் என்று பல்வேறு கட்டங்களில் கலைஞர்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்.
பல வருட படிப்புகள் நேரடி கிளாஸ்கள், பயிற்சி வகுப்புகள், வித்தியாசமான பயிற்சி முறைகள், குழு பயிற்சிகள், கொலாப்ரேஷன் வாய்ப்புகள், மாஸ்டர்கிளாஸ் வகுப்புகள், சர்டிபிகேட்கள் ஆகியவற்றை எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர் படிப்புகள் வழங்குகிறது.
பயிற்சி ரீதியான பாடமுறைகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் மூலம் இந்த தனித்துவமான கற்றல் முறை வகுக்கப்பட்டுள்ளது. இளம் கலைஞர்களுக்கான வழிகாட்டுதல் வகுப்புகள் மாதவி முட்கால், நிகிதா காந்தி, டாக்டர் என் ராஜம், பனாரஸ் பல்கலைக்கழகம் எச்ஓடி, டாக்டர் ருத்ரபட்ணம் தியாகராஜன், ஜெயின் பல்கலைக்கழக கர்னாட்டிக் சங்கீத பேராசிரியர், உதய் பாவால்கர், ஐடிசி சங்கீத் ஆராய்ச்சி அகாடமி ஆசிரியர் ஆகியோர் மூலம் நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு:
www.youngartiste.com பக்கத்தை பார்க்கவும்
பேஸ்புக்: Young Artiste
இன்ஸ்டாகிராம்: Young Artiste
ட்வீட்டர்: Young Artiste












Click it and Unblock the Notifications