என்ன நடந்தது? பாதியில் கைவிட்ட சிஎஸ்கே.. டு பிளஸிஸை ஆர்சிபி எடுத்தது ஏன் தெரியுமா? பரபர பின்னணி
பெங்களூர்: சிஎஸ்கே அணியின் டாப் வீரராக இருந்த டு பிளஸிஸை பெங்களூர் அணி இந்த முறை போராடி ஏலம் எடுத்துள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. டாப் வீரர்களின் ஏலம் முதல் கட்டமாக முடிந்துள்ளது.
டு பிளசிசை சிஎஸ்கே இழந்துள்ளது. சிஎஸ்கே அணியில் கடந்த 3 சீசன்கள் டு பிளசிஸ் மிக சிறப்பாக ஆடிய வீரர் டு பிளசிஸ். அதிலும் கடந்த வருடம் டு பிளசிஸ்தான் இரண்டாவது டாப் ரன் ஸ்கோரர்.

டு பிளசிஸ்
இவரை விட ருத்துராஜ் ஒரு ரன் மட்டுமே கூடுதலாக எடுத்து இருந்தார். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்காக இவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். இரண்டு சீசன்களில் சிஎஸ்கே கப் அடிக்க டு பிளசிஸ் காரணமாக இருந்தார்.பேட்டிங் மட்டுமின்றி இவர் பீல்டிங்கிலும் மிக சிறப்பாக செயலாற்றி வந்தார். அதேபோல் சிறந்த கேப்டன்சி மெட்டீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

டு பிளசிஸ்
இந்த நிலையில்தான் ஏலத்திற்கு முன்பாக டு பிளசிஸை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏலத்தின் போது சிஎஸ்கே இவரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று ஏலத்தில் சிஎஸ்கே டு பிளசிசை எடுக்கவில்லை. பெங்களூர் அணி இவரை போராடி அணியில் எடுத்துள்ளது. இவர் பெயரை அறிவித்தது சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க முயன்றது

பெங்களூர்
டு பிளசிஸை மூன்றரை கோடி ரூபாய் வரை எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஆனால் 4 கோடியை தாண்டிய பின் டு பிளசிசை சிஎஸ்கே பாதியில் கைவிட்டது. அதற்கு மேல் டு பிளசிசை சிஎஸ்கே கேட்கவில்லை. அதன்பின் ஏலத்தில் டெல்லி, குஜராத், பெங்களூர் அணிகள் கடுமையாக மோதின. ஆனால் என்ன நடந்தாலும் டு பிளசிஸை விட மாட்டோம் என்று பெங்களூர் முயன்றது.
Recommended Video

பெங்களூர்
கடைசியில் 7 கோடி ரூபாய்க்கு டு பிளசிசை பெங்களூர் எடுத்தது. பெங்களூர் அணியில் இப்போது கேப்டன் இல்லை. அந்த அணி புதிய கேப்டனை தேடி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபியன் லீக்கில் கேப்டனாக இருந்தவர் டு பிளசிஸ். அதேபோல் தென்னாப்பிரிக்க அணியிலும் கேப்டனாக இருந்தவர் டு பிளசிஸ். இதனால் அவரை இந்த முறை பெங்களூர் அணி கேப்டனாக அறிவிக்கும் முனைப்பில் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications