பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏலத்திற்கு வராமலே.. சொல்லி அடித்த பிரீத்தி ஜிந்தா.. ப்பா பஞ்சாப் டீமே மாறிடுச்சே.. 9 அணிகளுக்கு செக்

Google Oneindia Tamil News

பெங்களூர்: 2022 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது.

2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூரில் ஏலம் நடந்து வருகிறது.

இந்த முறை ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் ஆகிய இரண்டு அணிகள் இணைந்துள்ளன.

இவ்வளவு கோடியா! அடையாளம் தந்த இர்பான் பதான்.. ஐபிஎல் உலகில் 2 இளம் காஷ்மீர் வீரர்கள் செய்த சாதனை! இவ்வளவு கோடியா! அடையாளம் தந்த இர்பான் பதான்.. ஐபிஎல் உலகில் 2 இளம் காஷ்மீர் வீரர்கள் செய்த சாதனை!

பஞ்சாப்

பஞ்சாப்

இதனால் ஐபிஎல் தொடரில் இந்த முறை 10 அணிகள் ஆட உள்ளது. கடந்த 3 வருடங்களில் ஐபிஎல்லில் மோசமாக ஆடிய அணிகள் என்றால் அது பஞ்சாப் அணிதான். முக்கியமாக கே. எல் ராகுல் கேப்டன்சிக்கு கீழ் அந்த அணி மிக மோசமாக திணறியது. அதனால் ஏலத்திற்கு முன்பாகவே பஞ்சாப் அணி இவரை கழற்றி விட்டது.

ராகுல்

ராகுல்

இதையடுத்து தற்போது ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி இன்று ஏலத்தில் சிறப்பான வீரர்களை எடுத்துள்ளது. யாரும் எதிர்பார்க்காமல் வரிசையாக டாப் வீரர்களை பஞ்சாப் அணி ஏலம் எடுத்து வருகிறது. தொடக்கத்திலேயே ஷிகர் தவானை எடுக்க பஞ்சாப் அணி தீவிரம் காட்டியது.

தவான்

தவான்

அதன்படி டெல்லியில் சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவானை ரூ. 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். டெல்லி அணியுடன் போராடி பஞ்சாப் அணி இவரை எடுத்தது. அதன்பின் டெல்லியுடன் போராடி ரபாடாவை பஞ்சாப் அணி 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இவர்கள் இரண்டு பேருமே கடந்த 3 வருடமாக டெல்லி அணியில் சிறப்பாக ஆடி வந்தனர். ஏற்கனவே பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் இருக்கிறார்.

Recommended Video

    #IPLMegaAuction2022: அதிக தொகைக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ்... டூ பிளசிஸ்சை நழுவவிட்ட சிஎஸ்கே!
    வலிமையான டீம்

    வலிமையான டீம்

    அதேபோல் வலிமையான பவுலரான அர்ஷ்தீப் உள்ளார். இந்த நிலையில் தவான், ரபாடா வருகை மூலம் பஞ்சாப் அணி புதிய கோர் டீமை பெற்றுள்ளது. ஏலத்தின் தொடக்கத்திலேயே பஞ்சாப் அணி சிறப்பான வீரர்களை எடுத்து 9 அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. பஞ்சாப் அணி ஓனர் ப்ரீத்தி ஜிந்தா ஏலத்திற்கு வராமலே சிறப்பான அணியை எடுத்துள்ளது. பெரும்பாலும் தவான் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    IPL 2022: Punjab Kings team gets a whole new core team for this season after the auction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X