அரசியல் அறிவே இல்லாத அண்ணாமலை எங்களுக்கு வழிகாட்டி.. பகிரங்கமாக விமர்சித்த பாஜக மாஜி எம்.எல்.ஏ!
பெங்களுர்: அரசியல் குறித்த அறிவாற்றலே இல்லாத, பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற்றிராத அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு தேர்தல் வழிகாட்டியா என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா பகிரங்கமாக விமர்சித்துள்ளது பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா? முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மைக்கு சல்யூட் அடித்துக்கொண்டு இருந்த அவரின் பேச்சை எல்லாம் கேட்க வேண்டிய நிலை வந்துவிட்டது என கர்நாடக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எம்பி ரேணுகாச்சார்யா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். அண்ணாமலை ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்ததால் அம்மாநில தேர்தல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே13ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பிடித்தது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த பல முக்கிய வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.
பாஜகவின் முக்கியத் தலைவர் சிடி ரவி, சிக்மகளூர் தொகுதியில் தோல்வியடைந்தார். ஒன்னாளி தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் எம்எல்ஏ ரேணுகாச்சார்யா தோல்வியைத் தழுவினார். கர்நாடகா பாஜகவின் தோல்வியைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் பணியாற்றிய அண்ணாமலை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா, "அரசியல் அறிவு இல்லாத, ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெறாத அண்ணாமலை, சட்டமன்ற தேர்தலில் தேர்தல் இணை பொறுப்பாளராக இருந்த எங்களை வழி நடத்தினார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கு வந்து எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா? அவர் இங்கே வந்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் சல்யூட் அடித்த ஒருவரின் பேச்சை அவர்கள் இருவரும் கேட்க வேண்டியதாக இருந்தது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரேணுகாச்சார்யா.
மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சியின் மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்ததாக செய்திகள் வந்தன, ஒரு மணி நேரத்தில் அதை மறுத்து அறிக்கை வந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பாஜக கட்சி அலுவலகம் கார்ப்பரேட் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார்.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏவும், கர்நாடகா பாஜக நிர்வாகியுமான ரேணுகாச்சார்யா, கர்நாடகா தேர்தல் முடிவடைந்து 2 மாதங்களுக்குப் பிறகு அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications