தோண்ட தோண்ட அரிய தனிமங்கள்! நிலவுக்கு படையெடுக்கும் உலக நாடுகள்! சீனாதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்
பெங்களூர்: நிலவின் தென் துருவம் மீது உலக நாடுகளுக்க ஒரு கண் இருந்த நிலையில், இந்தியா அங்கு வெற்றிகரமாக சந்திரயான் 3 லேண்டரையும் ரோவரையும் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. ஆனால் நிலவு மீதான போட்டிக்கு சீனாதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது.

அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஹைட்ரஜனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதேபோல தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் 'சல்பரை' பிரக்யான் இருப்பதை ரோவர் நின்ற இடத்திலிருந்தே உறுதி செய்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்து தென் துருவத்திற்கு விண்கலத்தை ஏவி ஆய்வு செய்ய இருக்கிறது.
இப்படி உலக நாடுகள் நிலவை குறி வைக்க சீனா மிக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதேனும் ஒரு உலக நாடுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாகி உலகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்யும். கிரேக்கம், பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் யூனியன் என கடந்த காலத்தில் இந்த நாடுகள் மிகவும் வலிமை வாய்ததாக இருந்திருக்கின்றன. ஆனால் 1990களுக்கு பின்னர் அமெரிக்காவின் கைதான் ஓங்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவையே சீனா முந்தி வருகிறது. மனித வள வளர்ச்சி குறியீட்டிலும், பொருளாதாரத்திலும் சீனா அமெரிக்காவுக்கு பெரும் சவாலக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவிடம் இருக்கும் சுரங்ககங்கள்தான். உலகம் முழுவதும் அரிதான கனிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களை சீனா தன்வசம் வைத்திருக்கிறது. இந்த தனிமங்கள்தான் 4வது தொழில்நுட்ப புரட்சிக்கு அடிப்படையானது.
பருத்தியிலிருந்து ஆடை உருவாக்கப்பட்டது, பெட்ரோல், டீசல், மின்சாரம் கொண்டு மோட்டர்களை இயங்க வைத்தது, தொலை தொடர்பு கருவிகளை உருவாக்கியது என நாம் மூன்று தொழில் நுட்ப புரட்சியை கடந்து வந்திருக்கிறோம். தற்போது நான்காவது தொழில்நுட்ப புரட்சியின் வாசலில் மனிதர்கள் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். காற்றாலை, சூரிய மின் தகடுகள், போன்ற ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பம், 3D பிரிண்டர், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், கிரிப்டோ தொழில்நுட்பம், அட்வான்ஸ் சென்ஸிங் டெக்னாலஜி (Advanced sensing technologies) போன்றவைதான் நான்காம் தொழில்நுட்ப புரட்சி.
இதற்குதான் யட்ரியம், கியூரியம் லந்தனம், சீரியம், பிரஸோடைமியம், நியோடைமியம், ப்ரோமெத்தியம், சமாரியம், யூரோபியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், எட்டர்பியம், லுடீடியம் போன்ற தனிமங்கள் தேவைப்படுகிறது. இது நமது பூமியிலும் இருக்கிறது. ஆனால் மிக மிக குறைவான அளவு இருக்கிறது என்பதாலும், மற்ற தனிமங்களுடன் சேர்ந்திருக்கிறது என்பதாலும் இதை பிரித்தெடுத்து பயன்படுத்த அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த தனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் பெரும்பாலான சுரங்கங்களை சீனா கைவசம் வைத்திருக்கிறது. எனவே இந்தியா உட்பட உலக நாடுகள் தற்போது நிலவை குறி வைத்திருக்கின்றன.
இந்த சுரங்கங்களிலிருந்து மேற்குறிப்பிட்ட தனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த தனிமங்களை கொண்டு கம்ப்யூட்டர், செல்போன், காற்றாலை, சூரிய மின் தகடுகள் உருவாக்கப்படுகின்றன. மட்டுமல்லாது செயற்கை சூரியன் உருவாக்குவதிலும் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அணுக்கரு இணைவு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கை சூரியனிலிருந்து ஏராளமான ஆற்றலை நாம் பெற முடியும். இந்த சூரியனை உருவாக்க சில எரிபொருட்கள் தேவை. இவை சீனாவிடம்தான் அதிகம் கைவசம் இருக்கின்றன.
எனவே சீனாவை நம்பர் ஒன் நாடாக மாற்றுவதை தவிர்க்கவும், தங்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நிலவை குறி வைத்துள்ளன. இந்த ரேஸில் தற்போது இந்தியா முந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications