20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் கூட தலைநகர் பெங்களூரில் உள்ள 3 தொகுதிகள் என்பது கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் கோட்டையாக உள்ளது. வரும் 26ம் தேதி பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வெல்லப்போவது யார்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் தெற்கு, பெங்களூர் புறநகர் உள்பட தெற்கு கர்நாடகா பகுதிகளில் உள்ள 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்பிறகு மே மாதம் 7 ம் தேதி 2ம் கட்டமாக கர்நாடகாவின் வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜகவின் கோட்டை: பெங்களூர் சிட்டியை எடுத்து கொண்டால் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கும் தற்போது பாஜகவின் வசம் தான் உள்ளது. சொல்லப்போனால் பெங்களூர் பாஜகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
பெங்களூர் தெற்கு: இதில் பெங்களூர் தெற்கு தொகுதியை எடுத்து கொண்டால் இந்த தொகுதி கடந்த 1991 முதல் பாஜகவின் வசம் தான் உள்ளது. 1991ல் பாஜகவின் வெங்கடகிரி கவுடா வெற்றி பெற்றார். அதன்பிறகு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமார் 1996, 19998, 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் பாஜகவின் யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய தலைவரான தேஜஸ்வி சூர்யா வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். இவர் தான் மீண்டும் போட்டியிடுகிறார்.
பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக சவுமியா ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான இவர் மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் ஆவார். ராமலிங் ரெட்டி பிடிஎம் லே-அவுட் எம்எல்ஏவாக உள்ளார். இவருக்கு பெங்களூர் தெற்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் தேஜஸ்வி யாதவ் மற்றும் சவுமியா ரெட்டி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பெங்களூர் வடக்கு: பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதி கடந்த 2004ம் ஆண்டு முதல் பாஜகவின் வசம் உள்ளது. 2004ல் பாஜகவின் எச்டி சங்கிலியானா வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009ல் சந்திர கவுடா 2014, 2019ல் முன்னாள் முதல்வரும், மாஜி மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா வெற்றி பெற்றார். தற்போது சதானந்த கவுடா தேர்தலில் ஓய்வு பெற்ற நிலையில் இந்த தொகுதியில் உடுப்பி - சிக்கமகளூர் எம்பியாக உள்ள ஷோபா பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராஜீவ் கவுடா களமிறங்கி உள்ளார். இவர் கல்வியாளராக அறியப்படுகிறது. மேலும் கர்நாடகாவின் சசிதரூர் என்ற புனைப்பெயரில் ஆதரவாளர்களால் அழைக்கப்படுகிறார். மேலும் இந்த தொகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தினரின் வாக்கு அதிகம் உள்ளது. ராஜீவ் கவுடாவும் ஒக்கலிகர் என்பதால் அது அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.
பெங்களூர் சென்ட்ரல்: இந்த தொகுதி கடந்த 2009ல் தான் உருவானது. இந்த தொகுதி தற்போது வரை 3 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. 2009, 2014, 2019 என 3 தேர்தல்களிலும் பாஜகவின் வேட்பாளர் பிசி மோகன் தான் வெற்றி பெற்றார். தற்போது அவர் சிட்டிங் எம்பியாக மீண்டும் களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
மன்சூர் அலிகான் காங்கிரஸ் மூத்த தலைவரான ரகுமான் கானின் மகன் ஆவார். இவருக்கு அஹிண்டா சமுதாயத்தினரின் செல்வாக்கு உள்ளது. அதோடு பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள சிவாஜிநகர் சட்டசபை தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளன. இஸ்லாமியர்களின் வாக்கும் மன்சூர் அலிகானுக்கு கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.
காங்கிரஸ் பிளஸ்: இந்த முறை காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை மாற்றி களமிறக்கி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் அரசியணை ஏறியது. அதன்பிறகு காங்கிரஸ் கொடுத்த 5 முக்கிய வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்க நல்ல வரவேற்பு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் டிகே சிவக்குமார் மாநில தலைவராகவும், பெங்களூர் நகர பொறுப்பு அமைச்சராகவும் உள்ள நிலையில் எப்படியாவது பெங்களூரில் கால்பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து அவர் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பெங்களூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏக்களை நேரடியாக கண்காணித்து வேலை வாங்கி வருகிறார். இது காங்கிரசுக்கு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
பாஜகவின் பிளஸ் - மைனஸ்: மேலும் பாஜகவை எடுத்து கொண்டால் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் 16 இடங்களில் பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளன. இது பிளஸ் பாயிண்டாக உள்ளது. அதேவேளையில் பெங்களூர் தொகுதிகளில் தொடர்ந்து பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். ஆனாலும் கூட போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சுணக்கம் உள்ளதாக வாக்காளர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.
-
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications