அது போலி.. இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரத்யேகமாக ட்விட்டர் பக்கங்கள் இல்லை.. இஸ்ரோ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இஸ்ரோ தலைவராக உள்ள கே சிவனுக்கு பிரத்யேகமான ட்விட்டர் பக்கங்கள் இல்லை என இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.

இஸ்ரோ தலைவராக உள்ளவர் சிவன். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சிவன் இன்று நாடே உற்றுநோக்கும் சந்திரயான் 2 திட்டத்தை 98 சதவீதம் நடத்தி காட்டியுள்ளார்.

ISRO clarifies that its Chairman K.Sivan has no personal accounts in twitter

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை பல முறை தோல்வி கண்டுள்ளது. இதன் பிறகே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவோ முதல் முயற்சியிலேயே 95 சதவீத வெற்றியை தந்துவிட்டது.

மீதி 5 சதவீத வெற்றி லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காததால்தான் நடந்தது. அதிலும் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதால் நிச்சயம் லேண்டரை தரையிறக்க முயற்சிப்போம் என சிவன் தெரிவித்துள்ளார். எனவே தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார்.

இதனால் லேண்டரின் நிலை குறித்து அறிவதற்காக அவரது இஸ்ரோவின் டுவிட்டர் கணக்கை அனைவரும் பின்பற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் டுவிட்டரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவரது கணக்குதான் என நினைத்து போலி கணக்கில் வெளிவரும் தகவல்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதனால் மக்களை குழப்ப வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோ கூறுகையில், பல்வேறு சமூகவலைதளங்களில் கைலாசவடிவு சிவன் என்ற பெயரில் டுவிட்டர் கணக்குகள் இயங்கி வருகின்றன. இஸ்ரோ தலைவர் கே சிவனுக்கென பிரத்யேக கணக்குகள் ஏதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறோம் என கூறிய இஸ்ரோ, தனது அதிகாப்பூர்வ கணக்குகளை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+