பெங்களூரில் இயற்கை உபாதைக்கு உதவும் ஷாப்பிங் மால்கள்! சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் ஐடி ஊழியர்கள்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில தினங்களாக தண்ணீர் தட்டுப்பாடு தீவிரமாகி வரும் நிலையில் அங்கு பணியாற்றி வரும் ஐடி ஊழியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கும் சொந்த மாநிலங்களுக்கும் படையெடுத்து வருகிறார்கள். மழை பொய்த்தது, நிலத்தடி நீர் குறைந்தது உள்ளிட்டவைகளால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஒரு ஆப்ஷனை கேட்டு வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்போர் இயற்கை உபாதைகளை கழிக்கவும் ஷாப்பிங் மால்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சத்தால் ஏற்கெனவே சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு கொரோனா காலத்தில் பாடம் நடத்தியது போல் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. தண்ணீர் வசதியில்லாமல் டேங்கர் லாரிகளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லாரிகள் மூலம் தண்ணீர்: லாரிகள் மூலம் அதிக விலை கொடுத்து வாங்கும் தண்ணீரை சிக்கனமாக செலவிட முடிவு செய்த உணவக உரிமையாளர்கள், தட்டு, டம்ளர் உள்ளிட்டவைகளுக்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பேப்பர் தட்டுகள், பேப்பர் கப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐடி நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்கள் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அது போல் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், பிஜி ஹாஸ்டல்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்கள்: இதனால் சொந்த ஊருக்கு சென்று அங்கு வீட்டில் தங்கி வேலை செய்ய ஐடி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் பெங்களூரை சேர்ந்த சில பெண்கள் கூறுகையில், "வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில் தினந்தோறும் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கிறோம்.
அதற்கே உணவு சமைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க தண்ணீர் இல்லை. ஹோட்டல்களை போல் நாங்களும் பேப்பர் கப்புகள், பேப்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி வருகிறோம். வாரம் ஒரு முறை மட்டுமே துணிகளை வாஷிங் மெனிஷில் போட்டு துவைக்கிறோம். அதற்கு கூட குறைந்த அளவில் டிடர்ஜென்ட்டை பயன்படுத்துகிறோம்.
அதிக நுரை: அதிகமாக பயன்படுத்தினால் அதிக நுரை வந்து தண்ணீர் அதிகம் செலவாகும். மேலும் வாஷிங் மெஷினில் கூட ஒரு முறை அலசுவது, இருமுறை அலசுவது என்ற ஆப்ஷன்கள் உள்ளன. எனவே ஒரு முறை மட்டுமே அலசும் ஆப்ஷனை தேர்வு செய்கிறோம். இதற்கு மேல் எப்படி தண்ணீரை சிக்கனப்படுத்த முடியும் என எங்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது" என்கிறார்கள்.
பின்னணி என்ன: கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததாலும் நிலத்தடி நீர் குறைந்ததாலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , வாகனங்களை கழுவுவது உள்ளிட்டவைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
லோக்சபா தேர்தல்: மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் நிலையில் இந்த தண்ணீர் தட்டுப்பாடு சரியாகாவிட்டால் எப்படி வாக்குச் சாவடி மையங்களை அமைப்பார்கள். அங்கு வெளியூர்களில் இருந்து வரும் தேர்தல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எப்படி தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என தெரியவில்லை.
தண்ணீர் பிரச்சினையால் கர்நாடகாவுக்கு தேர்தல் பணியை பார்க்க வர மறுத்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இப்பவே இப்படி! இன்னும் ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படி இருக்கும் என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications