கன்னட முன்னணி நடிகர்கள், சிவராஜ்குமார், யஷ், சுதீப் வீடுகளில் ஐடி ரெய்டு!
பெங்களூர்: பெங்களூரில் நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், யஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடு உட்பட 25 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன்கள், சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார். இருவருமே முன்னணி நடிகர்கள் ஆகும். சமீபத்தில் வெளியான, 'கேஜிஎப்' திரைப்படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் யஷ் இவர்கள் வீடுகளில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

இதேபோல, 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம், தமிழக மக்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகர் சுதீப், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர்.மனோகர், ஜெயண்ணா, கேஜிஎப் திரைப்பட இணை தயாரிப்பாளர் விஜய் கிரங்காதர் ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் 25 இடங்களில் ரெய்டு நடத்தி வருவது கன்னட திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளில் ரெய்டு நடைபெறுகிறது.
யஷ் நடிப்பில் பல மொழிகளில், வெளியான கேஜிஎப், ரூ.150 கோடி வருமானம் ஈட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யஷ் சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு பழைய கடனை திரும்ப கொடுத்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று காலை முதல் பெங்களூரிலுள்ள சினிமா ஸ்டார்கள் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான பிற பகுதிகளிலும், வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications