ஜெகதீஷ் ஷெட்டர் கமிஷன் வாங்க மறுத்தார்.. அதனால் தான் பாஜக அவரை ஒதுக்கியது.. ராகுல் பரபர விளக்கம்
பெங்களூர்: ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க பாஜக மறுத்து விட்டது. இதனால் அக்கட்சியில் இருந்து விலகிய அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் கமிஷன் வாங்க மறுத்ததால் பாஜக சீட் கொடுக்கவில்லை என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது.

இதனால், கர்நாடகாவை தேர்தல் புயல் மையம் கொண்டு விட்டது. ஆளும் பாஜக எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேஎடிஸ் ஆகிய கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த மேஜிக் எண்ணை தொட்டு விட வேண்டும் என்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதற்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மேல் மட்ட தலைவர்களும் கர்நாடகத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கந்ராடகாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கால் டவுன் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுகூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு குறைந்நது 150 இடங்களையாவது மக்கள் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யும். பாஜகவிற்கு 40 சீட்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம். ஊழலை பற்றி பேசும் பிரதமர் மோடி, 40 சதவீதம் கமிஷன் வாங்கும் தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார். ஊழலுக்கு எதிராக மோடி போராடவில்லை என்பதையே இது காட்டுகிறது. முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஊழலில் ஈடுபடுவதில்லை என்பதாலேயே அவருக்கு பாஜக டிக்கெட் கொடுக்க மறுத்தது.
ஜெகதீஷ் ஷெட்டர் 40 சதவீத கமிஷன் வாங்குவது இல்லை. மைசூர் சாண்டல் சோப் முறைகேடு வழக்கில் ஒரு எம்.எல்.ஏவின் மகன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதுபோல பல முறைகேடுகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சப் இன்ஸ்பெக்டர் முறைகேடு, துணை பேராசிரியர் முறைகேடு என சொல்லிக்கொண்டே போகலாம். பணத்தின் மூலம் எம்.எல்.ஏக்களை திருடி பாஜக முந்தைய ஆட்சியை அமைத்தது.
அது ஒரு திருடப்பட்ட அரசாங்கம். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக எந்த ஒரு ஒப்பந்தம் என்றாலும் 40 சதவிகித கமிஷன் பெற்றது. ஆனால் காங்கிரஸ் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறது" என்றார். முன்னதாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பு மறுத்தது.
இதனால், அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகினர். விலகிய மறுநாளே காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார். அவருக்கு உப்பள்ளி தர்வார்ட் மத்திய தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்தது. இந்த நிலையில் தான், மூத்த தலைவராக இருந்தும் பாஜக சீட் கொடுக்க மறுத்ததற்கு அவர் கமிஷன் வாங்க மறுத்ததே காரணம் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications