சந்திச்சுகிட்டே இருந்தா...பாஜகவுடன் கூட்டணி என எப்போதுதான் அறிவிக்குமாம் கவுடா அண்ட் கோவின் மஜத?
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேவகவுடா- குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத, ஜேடிஎஸ்) இணையக் கூடும் என்பதை அடுத்தடுத்த சந்திப்புகள், தேவகவுடா தரப்பு வெளியிடும் கருத்துகள் உறுதி செய்வதாக கர்நாடகா தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதச்சார்பற்ற ஜனதா தளம் என பெயர் இருந்தாலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி சேருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் முடிவடைந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் மஜதவின் கோட்டையான பழைய மைசூர் மாகாணத்தில் காங்கிரஸ் அதிரடியாக வாகை சூடியது. இது மஜதவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 37 இடங்களில் வென்ற மஜத, கிங் மேக்கராக திகழ்ந்தது. மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைந்தது. ஆனால் மஜத- காங்கிரஸ் கூட்டணியை கவிழ்த்து அரியணை ஏறியது பாஜக. 2019 லோக்சபா தேர்தலில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அமைந்த போதும் பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றியது. தற்போதைய தேர்தலில் மஜத, காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டன. இத்தேர்தலில் மஜதவுக்கு வெறும் 19 இடங்கள்தான் கிடைத்தன. இத்தனைக்கும் மஜத மீண்டும் கிங் மேக்கராகக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றெல்லாம் கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் அனைத்தையும் தவிடு பொடியாக்கி காங்கிரஸ், தனித்தே 135 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இத்தேர்தல் முடிவடைந்ததுதான் தாமதம்.. அப்படியே மஜத காற்று பாஜகவின் பக்கம் சாயத் தொடங்கிவிட்டது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத அனைத்த் எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23-ல் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தார் தேவகவுடா.
அதாவது பாட்னா எதிர்க்கட்சிகள் சங்கமம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தேவகவுடா, அப்படியான ஒரு ஆலோசனைக் கூட்டத்தால் என்னதான் பய்ன்? எந்த கட்சிதான் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்தது? பாஜகவுடன் ஒவ்வொரு கட்சியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி வைத்துதான் இருக்கின்றன. இந்த நாட்டில் பாஜகவுடன் கூட்டணியே வைக்காத ஒரே ஒரு கட்சியை காட்டுங்கள்.. நான் பதில் சொல்கிறேன் என தடாலடியாக கூறியிருந்தார்.
மேலும் மதவாத கட்சி என்றால் என்ன? மதவாதம் என்பது என்ன? மதவாதம்- மதச்சார்பின்மை இதற்கு எல்லாம் முதலில் அர்த்தம்தான் என்ன? இதற்கெல்லாம் முதலில் விளக்கம் பெறப்பட வேண்டும். நாங்கள் முதலில் மஜத கட்சியை வலுப்படுத்துகிறோம். அதன் பின்னரே லோக்சபா தேர்தல் குறித்து சிந்திப்போம் எனவும் தேவகவுடா கூறியிருந்தார். அதேபோல அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமராசாமியும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, நேற்று தேவகவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பானது 10 மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பானதுதான் எனக் கூறப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான முதல் கட்ட ஆலோசனை/ பேச்சுவார்த்தைதான் நேற்று நடைபெற்றது என்கின்றன கர்நாடகா வட்டாரங்கள்.
என்றாவது பூனைக்குட்டி வெளியேவரத்தானே போகுது!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications