Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே அசத்தல்.. முதல் புள்ளியின் துவக்கம்.. முட்டிமோதிய "ஆபரேஷன்கள்".. தாமரை மீண்டும் மலருமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளில் கர்நாடகத்தை அள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்கள், யாருக்கு சாதகமாக அமைய போகின்றன என்ற ஆவலும் கிளம்பி உள்ளது.

கர்நாடக தேர்தலை பொறுத்தவரை, லிங்காயத் வாக்கு வங்கி, வொக்கலிகா வாக்கு வங்கி, ஆளும் கட்சிக்கு எதிரான அலை போன்ற விஷயங்கள்தான் முக்கிய காரணிகளாக அமைந்து வருகின்றன..

இதில் பிரதானமானவர்கள் லிங்காயத்துகள் ஆவார்கள்.. இவர்கள்தான் கிங் மேக்கர்களாகவும் அங்கு திகழ்ந்து வருகிறார்கள்.. சுமார் 18 சதவீதம் அவர்களது எண்ணிக்கை இங்குள்ளது.. அதுவும், கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் இவர்களது நேரடி தாக்கமும் விழுந்துள்ளது.

JDS Kumarasamy: If there is a hung assembly, what will BJP do and What is Congresss plan in karnataka election

பொம்மை + எடியூரப்பா: எனவே இந்த முறை பிரச்சாரங்களின்போது, பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இந்த 3 கட்சிகளின் முதல் குறியும் லிங்காயத்துகள் மீதுதான் விழுந்தன என்பதை மறுக்க முடியாது. பசவராஜ் பொம்மை + எடியூரப்பா இவர்கள் 2 பேரும் ஆளுக்கொரு பக்கம் தூண்களாகவும் இருக்கின்றனர்.. ஒருவேளை இந்த சமூகத்தின் ஆதரவு பாஜகவுக்கு அதிகம் கிடைத்தால், மீண்டும் காவி கொடி கர்நாடகத்தில் பறக்கும் என்றே தெரிகிறது. இதற்காகவே, முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு 51 தொகுதிகளில் லிங்காயத் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது காங்கிரஸ்.

அடுத்ததாக, வொக்கலிகா சமூகத்தினர், ஒவ்வொரு தேர்தலின்போதும் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.. இவர்கள் மட்டுமே மொத்தம் 16 சதவீதம் எண்ணிக்கையில் உள்ளனர்.. ஆனால், லிங்காயத்துகள் அளவுக்கு பாஜகவை இவர்கள் ஆதரிப்பதில்லை என்றே தெரிகிறது.. காங்கிரசுக்கோ ஓரளவு சப்போர்ட் உள்ளது. காரணம், இந்த இனத்தின் ஒரே ஒரு துடிப்பாக டிகே சிவகுமார் மற்றும் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளனர்..

ஒருவேளை இந்த சமூகத்தின் வாக்கு சதவீதத்தை, ஒரு குறிப்பிட்ட அளவு பாஜக பெற்றுவிட்டாலும்கூட, காவி கொடி கர்நாடகத்தில் பறக்க காரணமாகிவிடக்கூடும்.. ஆக, இந்த 2 சமூகத்தினரை பிரதானமாக நம்பியே தேசிய கட்சிகள் தங்கள் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளன. அந்தவகையில், ஆரம்பத்திலேயே பிரச்சாரத்தில் அசத்தல் காட்டியது பாஜக.

வடமாநிலங்கள்: பிரதமர் மோடியும், அமித்ஷாவும், பாஜக மூத்த தலைவர்களும், பலமுறை கர்நாடகம் வந்து பிரச்சாரம் செய்தபடியே இருந்தனர்.. பல்வேறு திட்டங்களும், அறிவிப்புளும் பிரதமரால் வெளியிடப்பட்டன.. இலவச அறிவிப்புகளை விமர்சிக்கும் பாஜக, அதே விஷயத்தை இந்த முறை தங்கள் கையில் எடுத்தது.. இதில் கடைசி அஸ்திரமான, பஜ்ரங்பாலி மற்றும் பஜ்ரங்தள் விவகாரத்தை கையில் எடுத்தது பாஜக.. பிரதமர் நடத்திய ரோடு ஷோவில், ஜெய் பஜ்ரங்பலி என்ற விண்ணை முட்டியது..

இது காங்கிரஸ் தரப்பை சீண்டும்விதமாகவே பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட இந்த விஷயத்தை எந்த அளவுக்கு பாஜக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது என்பது இனிமேல்தான் தெரியவரும். அதேபோல, ஜேடிஎஸ்ஸின் பங்கு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், அநேகமாக இந்த முறை தொங்கு சட்டசபை அமையலாம் என்கிறார்கள்.. அப்படி மட்டும் அமைந்துவிட்டால், இதையே தங்களுக்கு சாதகமாக்கவும் பாஜக நிச்சயம் முயலும் என்கிறார்கள்..
அதேபோல, பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் ஒரே எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான்.. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் 3 மாநிலங்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானும் உள்ளன.. ஒருவேளை ஆட்சியை அங்கு இழக்க நேரிட்டால், 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸின் முக்கியத்துவம் குறைந்துவிடும்.. அந்தவகையில், மத்தியப்பிரதேச தேர்தல் போலவே கர்நாடக தேர்தலும் காங்கிரசுக்கு முக்கியமாக உள்ளது.. அதனாலேயே ராகுல் காந்தியும், பிரியங்காவும், மாறி மாறி வந்து பிரச்சாரம் செய்தனர்.

JDS Kumarasamy: If there is a hung assembly, what will BJP do and What is Congresss plan in karnataka election

ராகுல்காந்தி நடைபயணம்: இதில் ராகுல்காந்தின் நடைபயணமானது, முக்கிய இடத்தை பெற்று தந்துள்ளது.. தன்னெழுச்சியான போராட்டம் என்றே சொல்லலாம்.. கர்நாடகா உட்பட நாடு முழுவதும் இந்த யாத்திரையானது, பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டதை மறுக்க முடியாது.. போதாக்குறைக்கு எம்பி பதவி பறிப்பில் பாஜக கையை வைக்க, அதுவே, ரிவர்ஸ் கியர் போட்ட மாதிரி, ராகுலுக்கு ஆதரவு அலைகளை அபரிமிதமாக அள்ளிவழங்கிவிட்டது.

அதேபோல இரு கட்சிகளுமே மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசியிருக்கின்றன. இலவசங்கள் வழங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், அவரது கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இலவச சமையல் கேஸ் சிலிண்டர், அரை லிட்டர் பால் என இலவசங்களை அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியோ, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என்று தன் பங்குக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால், இவையெல்லாம் வாக்குகளாக மாறுமா என்றுதான் தெரியவில்லை.

முன்னோட்டம்: இந்த தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா? சாவா? போராட்டமாக அமைந்துள்ளது.. காரணம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதனைப் பார்ப்பதுதான்..இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் அகில இந்திய அளவில் தான் ஒரு பலவீனமாக கட்சியாக பார்க்கப்படக்கூடுமோ என்ற எண்ணம் அக்கட்சியிடம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பெரிய மாநிலங்களுக்கு அடுத்தடுத்த தேர்தல்கள் நடைபெற உள்ளநிலையில், இந்த கர்நாடக தேர்தல் அதற்கான முதல் புள்ளியாக பார்க்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+